ETV Bharat / sports

ஏப்ரல்வரை அவரால் அணிக்குத் திரும்ப இயலாது: சொல்கிறார் எம்.எஸ்.கே. பிரசாத்! - இந்திய தேர்வுகுழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார், தனது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்தாண்டு ஏப்ரல் மாதம்வரை அணிக்குத் திரும்ப இயலாது என இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.

MSK Prasad
MSK Prasad
author img

By

Published : Dec 24, 2019, 4:59 PM IST

Updated : Dec 24, 2019, 5:33 PM IST

இந்திய - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் தனது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் இந்தியா-இலங்கை அணிகளுக்கு எதிரான டி20, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீபக் சஹார் இந்த இரு தொடர்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து இந்திய தேர்வுக்குழுத்தலைவர் பிரசாத் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரையில் அவர் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல்வரை அணிக்குத் திரும்புவது கடினம் என நினைக்கிறேன். அதேபோல் இந்திய அணியைப் பொறுத்தவரையில் அனைத்து துறைகளிலும் மாற்று வீரர்கள் ஏராளமாக உள்ளனர். அதனால் இன்னும் 6-7 வருடங்களுக்கு அணியின் நிலை பற்றி கவலைப்படத் தேவையில்லை" எனக் கூறியுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார்
வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார்

மேலும் பிரித்வி ஷா இந்திய ஏ அணிக்குத் தேர்வு செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரசாத், "அவர் சமீபத்தில் நடந்துமுடிந்த ரஞ்சி கோப்பையில் இரட்டை சதமடித்து அசத்தியதையடுத்து, அவரின் பேட்டிங்கை மேம்படுத்தும் முனைப்பில் தற்போது இந்திய ஏ அணியில் தேர்வு செய்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க:”அவரை விளையாட அனுப்பாதீர்கள்” - முகமது ஹபீஸ் கோரிக்கை!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/cricket/cricket-top-news/deepak-chahar-will-remain-out-of-squad-till-april-2020-says-msk-prasad/na20191223225327571

Conclusion:
Last Updated : Dec 24, 2019, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.