"நாங்கள் வலுவான அணியாக மீண்டு வருவோம். அதற்கு தானே நாங்கள் பெயர் பெற்றவர்கள்". கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கடைசி போட்டியன்று தோனி உதிர்த்த வார்த்தைகள் இவை. ஆம், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி எப்போதும் வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்து போராடக்கூடியது என்பதை ரசிகர்கள் அறிவார்கள்.
நடைபெற்ற அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்ற ஒரே அணியென்று பெயரெடுத்த சிஎஸ்கே, கடந்த 2020 தொடரில் முதன்முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறாமல் வெளியேறியது.
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி பெயரளவில் வலுவாக காணப்பட்டாலும், இந்த அணியினர் வரும் தொடரில் சென்னையை மீட்டெடுக்கும் அளவிற்கு 'ஸ்பார்க்' உள்ளவர்களா என்பதை இங்கு பார்ப்போம்.
அனுபவங்களின் விலகல்
கடந்த ஐபிஎல் தொடரில் அனுபவ வீரர்களையே மலையென நம்பி சிஎஸ்கே களமிறங்கியது. ஆனால், இப்போது ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றும், சீனியர் சுழற்பந்துவீச்சாளர்களான பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், ஆல்-ரவுண்டர் கேதார் ஜாதவ் ஆகியோர் அணியிலிருந்தும் வெளியேறி இருக்கிறார்கள்.
-
07:03 Anbu Moments! #Yellove #WhistlePodu 💛🦁 @msdhoni @ImRaina pic.twitter.com/eJ1pdDuLMt
— Chennai Super Kings (@ChennaiIPL) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">07:03 Anbu Moments! #Yellove #WhistlePodu 💛🦁 @msdhoni @ImRaina pic.twitter.com/eJ1pdDuLMt
— Chennai Super Kings (@ChennaiIPL) April 1, 202107:03 Anbu Moments! #Yellove #WhistlePodu 💛🦁 @msdhoni @ImRaina pic.twitter.com/eJ1pdDuLMt
— Chennai Super Kings (@ChennaiIPL) April 1, 2021
வாட்சனைத் தவிர்த்து மற்ற 3 வீரர்களும் கடந்த காலங்களில் அவர்களின் முழுத்திறனை வெளிப்படுத்தாமல் இருந்தாலும், அவர்களின் இடங்கள் வெற்றிடங்களாக தான் காணப்படுகிறது.
அவ்வீரர்களுக்கு ஈடுக்கொடுக்கும் வகையில் தான் சென்னை அணி நிர்வாகம் இளரத்தங்களைப் பாய்ச்சி இருக்கிறது. சுழற்பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் மிரட்டும்போது அவருக்கு பக்கபலமாக இருக்க, மற்றொரு இந்திய ஸ்பின்னர் தேவைப்பட்டது. அதற்காக தான் பிப்ரவரியில் நடந்த மினி-ஏலத்தில் கிருஷ்ணப்பா கவுதமை ரூ.9.25 கோடிக்கு சென்னை அணி வாங்கியது.
சிக்கலாகும் தொடக்கம்
கடந்த சீசனில் 13 போட்டிகளில் 449 ரன்கள் குவித்த தொடக்க வீரர் ஃபாப் டூ பிளெசிஸ், இந்த முறையும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் பட்சத்தில், அவருடன் யார் களமிறங்குவது என்பது பெரும் குழப்பமாக இருந்து வருகிறது.
சென்ற 2020 தொடரில் ருத்ராஜ் கெய்க்வாட் கடைசி மூன்று போட்டிகளிலும் களமிறக்கப்பட்டு, மூன்று அரை சதங்களைப் பதிவு செய்தார். இந்த ஆண்டு அணியில் இணைந்துள்ள ராபின் உத்தப்பா தொடக்கத்தில் இறங்கி அதிரடி காட்டுவதில் வல்லவர். இந்த இருவருக்கும் தொடக்கத்திற்காக போட்டி நிலவும் என்றே தெரிகிறது.
மேலும், கடந்த ஐபிஎல் தொடரில் பங்கெடுக்காத சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால், அவரின் ஆஸ்தான இடமான ஒன்-டவுனில் தான் ஆடுவார். ஆதலால் ருத்ராஜ் அல்லது உத்தப்பா, ராயுடு நான்காவது, ஐந்தாவது இடத்தில் ஆட நேரிடலாம்.
-
#SuperMatch highlights! Catch all the hits, swings and spells from when the lions took on themselves! #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/DTCd11M13N
— Chennai Super Kings (@ChennaiIPL) April 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#SuperMatch highlights! Catch all the hits, swings and spells from when the lions took on themselves! #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/DTCd11M13N
— Chennai Super Kings (@ChennaiIPL) April 7, 2021#SuperMatch highlights! Catch all the hits, swings and spells from when the lions took on themselves! #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/DTCd11M13N
— Chennai Super Kings (@ChennaiIPL) April 7, 2021
மேலும் டெஸ்ட் வீரர் என்று பெயரெடுத்த புஜாராவை ஏலத்தில் சென்னை அணி எடுத்துள்ளது. அவர் களமிறக்கப்பட்டால் அவரின் எந்த இடத்தில் களமிறக்கப்படுவார் என்ற சந்தேகமும் நிலவுகிறது.
முழுமையான அணியா சென்னை?
சென்னை அணியின் முப்பெரும் தூண்களாக கருதப்படும் தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் நீண்ட இடைவேளைக்குப் பின் விளையாடுவது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம். அணியின் வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்களான சாம் கரன், டூவைன் பிரேவோ, மொயின் அலி ஆகியவர்களில் யாரை பிளேயிங் லெவனில் சேர்ப்பது என்பதும் சற்று கடினமானது தான்.
இவ்வாறு இருக்க தீபக் சஹார், லுங்கி இங்கிடி, ஷர்துல் தாக்கூர், சாம் கரன் என வேகப்பந்துவீச்சில் வரிசைக் கட்டி மிரட்டுகிறது சிஎஸ்கே.
பிளேயிங் லெவனை சரியாக தேர்ந்தெடுக்கும் பட்சதிலும், வீரர்களுக்களை பொருத்தமான வரிசையில் களமிறக்கும்பட்சத்திலும் சென்னை அணி மீண்டெழ வாய்ப்புள்ளது.
சென்னை அணி ரசிகர்கள் கோப்பையை வெல்வதைவிட, எளிதில் வெல்லமுடியாத அணியாக சிஎஸ்கே இருப்பதையே விரும்புகிறார்கள். ஆக சண்டை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கே.எம்.ஆசிப், தீபக் சாஹர், டுவைன் பிராவோ, ஃபாப் டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிர், நாராயண் ஜெகதீசன், கரன் சர்மா, லுங்கி இங்கிடி, மிட்செல் சாண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், சாய் கிஷோர், ராபின் உத்தப்பா, மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம், செட்டேஸ்வர் புஜாரா, ஹரி நிஷாந்த், ஹரிஷங்கர் ரெட்டி, பகத் வர்மா.
இதையும் படிங்க: இந்த முறையாவது கோப்பையை தனதாக்குமா ஆர்சிபி?