ETV Bharat / sports

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் காலமானார்...! - Allan Border - Dean Jones

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிரபல வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார்.

dean-jones-passed-away-at-mumbai
dean-jones-passed-away-at-mudean-jones-passed-away-at-mumbaiai
author img

By

Published : Sep 24, 2020, 4:24 PM IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ். 59 வயதாகும் இவர், வர்ணனையாளராக பல போட்டிகளில் பங்கேற்றவர். இவரது வர்ணனைகள் உலகக்கோப்பைத் தொடரின் போது ரசிகர்களிடையே பிரபலமடைந்தது.

வர்ணனை என்பது வெறும் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் பவுண்டரிகளுக்குப் பில்டப் வார்த்தைகள் கொடுப்பது எல்லாம் கடந்து, ரசிகர்கள் பார்க்கும் போட்டியில் அவர்களுக்கு தெரியாத விஷயங்கள் பற்றி கதையாக கூற வேண்டும். அந்த வகையில் வர்ணனை என்னும் கலையை முழுமையாக கற்று, தனித்துவத்துடன் செய்து வந்தவர் டீன் ஜோன்ஸ்.

இவருக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கும் ஒரு பெரிய கனெக்‌ஷன் உண்டு. கடந்த 1986ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதில் சென்னை மைதானத்தில் ஆடியப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆலன் பார்டர் - டீன் ஜோன்ஸ் இணை இந்திய பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்தனர்.

அந்தப் போட்டியில் சென்னையின் வெயில் தாங்க முடியாமல் மைதானத்திலேயே வாந்தி எடுத்தும் டீன் ஜோன்ஸ் களத்தில் கம்பீரமாக நின்று ஆடிய ஆட்டம் இன்றும் ரசிகர்களால் நினைவு கூரப்பட்டு வருகிறது.

தொடர்ந்து சென்னை அணி பற்றியும், இந்திய அணி பற்றியும் விமர்சனம் செய்து வந்ததால், ரசிகர்களுக்கும் இவருக்கும் நல்ல பரீட்சயம் இருந்தது.

இந்த நிலையில், மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது திடீர் உயிரிழப்பு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் ஆகியோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவின் சென்சேஷன் ஷஃபாலி வர்மா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.