ETV Bharat / sports

டான்... டான்... டானுக்கெல்லாம்... டான்... இந்த வார்னர் தான்! - டேவிட் வார்னர் முச்சதம்

அடிலெய்டு ஓவல் மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த டான் பிராட்மேனின் சாதனையை வார்னர் முறியடித்துள்ளார்.

David Warner Scores Triple Hundred, and Breaks Records In 2nd Test Against Pakistan

author img

By

Published : Nov 30, 2019, 3:54 PM IST

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில், முச்சதம் அடித்ததன் மூலம் வார்னர் பல சாதனைகளை முறியடித்துள்ளார்.

வார்னரின் சாதனைகள்:

  • ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்டு ஓவல் மைதானத்தில், முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை வார்னர் படைத்துள்ளார். முன்னதாக, டான் பிராட்மேன் 299 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
  • பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி 302 ரன்கள் அடித்திருந்த நிலையில், தற்போது வார்னர் 335 ரன்கள் அடித்ததன் மூலம் அவரின் சாதனையை முறியடித்துள்ளார்.
  • பிங்க் பால் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு நாளில் அதிக ரன்கள் அடித்த அசார் அலியின்(156 ரன்கள்) மற்றொரு சாதனையையும் வார்னர் தகர்த்தார். வார்னர் முதல் நாளில் 166 ரன்கள் எடுத்திருந்தார்.

அடிலெய்டு டெஸ்டில் ஆடுவதற்கு முன், பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் 199 ரன்கள் எடுத்திருந்த வார்னர் 24.87 ஆவரேஜ் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஜோடி, வார்னர் - மார்னஸ் லபுஸ்சாக்னே(361 ரன்கள்) ஜோடியாகும். முன்னதாக, அலெஸ்டர் குக் - ஜோ ரூட்(248 ரன்கள்) எடுத்திருந்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது.

இதையும் படிங்க: ஜான்டி ரோட்ஸூக்கு முன் இவர்தான் கெத்து

Intro:Body:

David Warner Scores Triple Hundred, Breaks Several Records In 2nd Test Against Pakistan

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.