இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸின் தந்தை ஜெரால்ட் கெட் ஸ்டோக்ஸ் (65) காலமானார். இவர் முன்னாள் ரக்பி வீரர். கடந்த சில மாதங்களாக மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கெட் ஸ்டோக்ஸ், நியூசிலாந்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் சிகிச்சையின்போது உடனிருக்க வேண்டும் என்பதால் கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலிருந்து இடையிலேயே விலகினார் பென் ஸ்டோக்ஸ். இதன் காரணமாகத்தான், கடந்த ஐபிஎல் தொடரில் பாதியில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தார்.
பென் ஸ்டோக்ஸ் தற்போது தென் ஆப்பிரிக்கா உடனான தொடரில் பங்கேற்றுள்ளார். டி20 தொடரை இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றியது. கரோனா பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக ஒருநாள் தொடரை ஒத்திவைக்க இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புக்கொண்டன.
-
Our thoughts are with @benstokes38 & his family following the sad news of the death of his father Ged Stokes.
— Test Match Special (@bbctms) December 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Ged played Rugby League for New Zealand as well as playing and coaching @workingtonTown. #bbccricket pic.twitter.com/GUdZENUZyd
">Our thoughts are with @benstokes38 & his family following the sad news of the death of his father Ged Stokes.
— Test Match Special (@bbctms) December 8, 2020
Ged played Rugby League for New Zealand as well as playing and coaching @workingtonTown. #bbccricket pic.twitter.com/GUdZENUZydOur thoughts are with @benstokes38 & his family following the sad news of the death of his father Ged Stokes.
— Test Match Special (@bbctms) December 8, 2020
Ged played Rugby League for New Zealand as well as playing and coaching @workingtonTown. #bbccricket pic.twitter.com/GUdZENUZyd
இதையும் படிங்க:பென் ஸ்டோக்ஸ் தோனியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஸ்ரீசாந்த்