ETV Bharat / sports

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவித்தது வெஸ்ட் இண்டீஸ்! - டேரன் பிராவோ சிம்ரன் ஹெட்மையர் நீக்கம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், இரு புதுமுகங்கள் அடங்கிய அணியை அறிவித்தது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம்.

cricket-west-indies-announce-squad-for-england-test-tour

author img

By

Published : Jun 3, 2020, 7:40 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் ஒரு சில நாடுகள் தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஜூலை 8ஆம் தேதிமுதல் தொடங்குவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் ஜூன் 9ஆம் தேதி இங்கிலாந்து வருகை தரவுள்ளதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் 14 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிபிடத்தக்க விஷயமாக புதுமுக வீரர்கள் நக்ருமா பொன்னர், வேகப்பந்து வீச்சாளர் செமர் ஹோல்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், அந்த அணியின் நட்சத்திர வீரர்களான டேரன் பிராவோ, ஷிம்ரான் ஹெட்மையர், கீமோ பால் ஆகியோர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து செல்ல மறுப்பு தெரிவித்ததால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், நக்ருமா பொன்னர், கிரெய்க் பிராத்வொய்ட், ஷமர் ப்ரூக்ஸ், ஜான் காம்ப்பெல், ரோஸ்டன் சேஸ், ராகீம் கார்ன்வால், ஷேன் டோவ்ரிச், செமர் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்சாரி ஜோசப், ரேமான் ரீஃபர், கெமர் ரோச்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.