சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடி மன்னன் என்ற பெயரைப் பெற்றவர் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில். இவர் இதுவரை டி20 கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும், 20-க்கும் மேற்பட்ட சதங்களையும் விளாசியுள்ளார். மேலும் ஐபிஎல், சிபிஎல், பிக் பேஷ், பிஎஸ்எல், பிபிஎல் என உலகின் பல்வேறு வகையான டி20 தொடர்களிலும் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பல்வேறு அணிகளில் விளையாடியுள்ள கெயில், கடந்த ஆண்டு ஜமைக்கா தல்லாவாஸ் (Jamaica Tallawahs) அணிக்காக விளையாடிவந்தார். இந்நிலையில் இந்தாண்டுக்காக சிபிஎல் தொடர் வீரர்கள் ஏலத்தில், கெயிலை ஜமைக்கா அணி விடுவித்துள்ளது.
இதனையடுத்து செயிண்ட் லூசியா ஸாக்ஸ் அணி கெயிலை தங்களது அணிக்காக ஏலத்தில் எடுத்துள்ளது. இது குறித்து செயிண்ட் லூசியா அணியின் கேப்டன் டேரன் சமி கூறுகையில், "கெயிலை எங்களது அணியில் பார்ப்பதற்கு, ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அவர் உலகின் தலைசிறந்த டி20 பேட்ஸ்மேன். அவரது ஆட்டத்தைப் பார்ப்பதற்கு எனக்குப் பொறுமையில்லை. இருப்பினும் கரோனாவால் நாங்கள் அதற்காகக் காத்திருந்தாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
NEW SIGNING! ✍️🏏
— St Lucia Zouks (@Zouksonfire) April 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
It’s B😎SS TIME! We’re delighted to welcome the #UniverseBoss to our squad. 🤩#ZouksOnFire #BiggestPartyinSport #CricketPlayedLouder @henrygayle pic.twitter.com/QYLaPSquno
">NEW SIGNING! ✍️🏏
— St Lucia Zouks (@Zouksonfire) April 22, 2020
It’s B😎SS TIME! We’re delighted to welcome the #UniverseBoss to our squad. 🤩#ZouksOnFire #BiggestPartyinSport #CricketPlayedLouder @henrygayle pic.twitter.com/QYLaPSqunoNEW SIGNING! ✍️🏏
— St Lucia Zouks (@Zouksonfire) April 22, 2020
It’s B😎SS TIME! We’re delighted to welcome the #UniverseBoss to our squad. 🤩#ZouksOnFire #BiggestPartyinSport #CricketPlayedLouder @henrygayle pic.twitter.com/QYLaPSquno
வெஸ்ட் இண்டீஸில் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர், தற்போது ஏற்பட்டுள்ள கரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபெறுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:தலைமை பயிற்சியாளரை நீக்கிய கேரளா பிளாஸ்டரஸ் அணி!