கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து நாட்டு அரசுகளும் பொதுமக்கள் ஓர் இடத்தில் கூடுவதைத் தவிர்க்க அறிவுறுத்திவருகிறது. சர்வதேச அளவில் மால்கள், கல்வி நிறுவனங்கள், பார்கள், திரையரங்கங்கள், விளையாட்டு மைதானங்கள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டு வருகிறது.
இதனிடையே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர், கரோனா வைரஸால் சர்வதேச அரசியல் பிரகடனம் நீடித்து வருவதால், அனைவரும் அவரவரின் செல்போனையும் ஆஃப் செய்தால் என்ன? இரண்டு வாரங்களுக்கு அனைத்து செல்போனையும் ஆஃப் செய்ய முடியுமா? என ட்வீட் செய்துள்ளார்.
இதேபோல் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும், கால்பந்து வீரர்களும் கரோனா வைரஸிலிருந்து மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தப்பட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர்... மனைவியின் ஜாலி கடிதம்...!