ETV Bharat / sports

நியூசிலாந்து ‘டூ’ அமெரிக்கா: சர்வதேச வீரர்களுக்கு வலை விரிக்கும் அமெரிக்கா!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான கோரி ஆண்டர்சன், நியூசிலாந்து சர்வதேச கிரிக்கெட் அணியிலிருந்து விலகி அமெரிக்கா அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Corey Anderson quits international cricket for NZ, to play in US

author img

By

Published : Dec 5, 2020, 3:30 PM IST

நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆலரவுண்டர் கோரி ஆண்டர்சன். இவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த பந்துகளில் சதமடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும் நியூசிலாந்து அணிக்காக அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் அணியிலும் விளையாடிவுள்ளார்.

இந்நிலையில் கோரி ஆண்டர்சன், நியூசிலாந்து கிரிக்கெட் அணியிலிருந்து விலகி அமெரிக்கா அணிக்காக சர்வதேச போட்டிகளில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோரி ஆண்டர்சன்
கோரி ஆண்டர்சன்

முன்னதாக தென் ஆப்பிரிக்க அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த ரஸ்டி தெரான், டேனே பியட் ஆகியோர் அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தற்போது அந்த வரிசையில் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சனும் இணையவுள்ளார்.

கிரிக்கெட் அமெரிக்கா
கிரிக்கெட் அமெரிக்கா

மேலும் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக்கோப்பை வெல்வதற்கு காரணமாக இருந்த லியம் பிளங்கிட் மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் வீரர் சமி அஸ்லாம் ஆகியோரையும் அமெரிக்க அணி ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'வணக்கம் டா மாப்ள' ஆஸ்திரேலியாவிலிருந்து வார்னர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.