ETV Bharat / sports

ரஷித் கானின் மனைவி அனுஷ்கா சர்மாவா? குழப்பத்தில் கூகுள்! - அனுஷ்கா சர்மா

இந்திய கேப்டன் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கானின் மனைவி என கூகுள் தேடலில் காட்டுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Controversial Google search results shows Anushka Sharma as Rashid Khan's wife

author img

By

Published : Oct 12, 2020, 5:45 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், இந்திய சினிமாவின் முன்னணி நடிகையுமானவர் அனுஷ்கா சர்மா. சமீபத்தில் விராட் கோலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய கூகுள் தேடலில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கானின் பெயரை தேடும்போது, அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா என்ற பதில் வருவது கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியின் போது ரஷித் கான் தனக்கு பிடித்த நடிகைகளாக அனுஷ்கா சர்மா, ப்ரீத்தி சிந்தா ஆகியோர் பெயர்களை தெரிவித்திருந்தார். ஆனால், கூகுள் தேடல் அதனை தவறாக புரிந்துகொண்டு ரஷித் கானின் மனைவி என தேடலில் பதிவிட்டால், அதற்கு அனுஷ்கா சர்மாவின் பெயரை பதிலாக காட்டுகிறது. இது விராட் கோலி, அனுஷ்கா சர்மா, ரஷித் கான் ஆகியோரது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கானிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இது என்னடா கோலிக்கு வந்த புது சோதன...!

இதையும் படிங்க:ஐபிஎல் 2020 : கேகேஆர் vs ஆர்சிபி! வெல்வது யார்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.