கரிபீயன் பிரிமியர் லீக் போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. இதன் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சோயப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணி டேரன் சமி தலைமையிலான செயின் லூசியா ஸோக்ஸ் அணியை எதிர்கொண்டது.
முதலில் டாஸ் வென்ற லூசியா ஸோக்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து பிராண்டன் கிங், சந்தர்பால் ஹெம்ராஜ் வாரியர்ஸ் ஆகியோர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கிங் 7 ரன்களிலும், ஹெம்ராஹ் 14 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். அதன்பின் லூசியா ஸோக்ஸ் அணியின் ஓபெட் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வாரியர்ஸ் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் இருபது ஓவர்கள் முடிவில் வாரியர் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கீமோ பவுல் 38 ரன்கள் எடுத்தார். லூசியா ஸோக்ஸ் அணி சார்பில் ஓபெட் மெக்காய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
-
Guyana Amazon Warriors won by 13 runs!#CPL19 #Biggestpartyinsport #GAWvSLZ pic.twitter.com/Ni0qViveEo
— CPL T20 (@CPL) September 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Guyana Amazon Warriors won by 13 runs!#CPL19 #Biggestpartyinsport #GAWvSLZ pic.twitter.com/Ni0qViveEo
— CPL T20 (@CPL) September 6, 2019Guyana Amazon Warriors won by 13 runs!#CPL19 #Biggestpartyinsport #GAWvSLZ pic.twitter.com/Ni0qViveEo
— CPL T20 (@CPL) September 6, 2019
அதன்பின் 156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய லூயிஸ் ஸோக்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் திசாரா பெரெரா, டேரன் சமி, நஜிபுல்லா ஜார்டன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ரஹீம் கார்ன்வால் 36 ரன்களை அடித்தார். வாரியர்ஸ் அணி சார்பில் ஷதாப் கான் மூன்று விக்கெட்டுகளையும், கிறிஸ் கிரீன் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் மூலம் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் செயின் லூயிஸ் ஸோக்ஸ் அணியை வீழ்த்தியது. சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய கிறிஸ் கிரீன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.