ETV Bharat / sports

ஆசியாவின் முதல் பந்துவீச்சாளர் - கெத்து காட்டிய பும்ரா

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆசியாவின் முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை இந்திய வீரர் பும்ரா படைத்துள்ளார்.

Bumrah
author img

By

Published : Aug 26, 2019, 8:32 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரர் விளையாடுவதை வைத்துதான் அவரது ஆட்டத்திறனை கணக்கிடமுடியும். அதுவும், சொந்த மண்ணில் மட்டும் நன்கு ஆடினால் போதாது, அந்நிய மண்ணிலும் நன்கு விளையாடினால்தான் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக அங்கிகரீக்கப்படுவார். இது பேட்ஸ்மேன், பவுலர், ஆல்ரவுண்டர் என அனைவருக்கும் பொருந்தும்.

இந்திய அணியில் ஜாகிர் கானுக்குப் பிறகு இஷாந்த் ஷர்மா, அஷ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் போன்ற பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்படுகின்றனர். ஆனாலும், இவர்கள் அந்நிய மண்ணில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய பந்துவீச்சாளர் பும்ரா சிறப்பாக செயல்பட்டுவருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்றது. இதில், இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா ஏழு ரன்களை மட்டுமே வழங்கி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.

இதன்மூலம் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆசியாவின் முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

இந்த சாதனையை பும்ரா தனது நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலேயே படைத்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

Bumrah the First asian bowler to achieve the feet 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.