அண்மையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இத்தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த இங்கிலாந்து அணி ஸ்டூவர்ட் பிராடின் வருகைக்குப் பிறகு அடுத்தடுத்து இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை வென்றது.
குறிப்பாக, மான்செஸ்டரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அவர் பேட்டிங்கில் அதிரடியாக 62 ரன்களை அடித்தது மட்டுமின்றி, 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு ஆணிவேராக அமைந்தார்.
இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் கிரேக் பிராத்வெயிட்டின் விக்கெட்டைக் கைப்பற்றியதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது பந்துவீச்சாளர், இரண்டாவது இங்கிலாந்து வீரர் ஆகிய சாதனைகளைப் படைத்தார்.
இதன் பலனாக ஐசிசி நேற்று (ஜூலை 29) வெளியிட்ட டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் 10ஆவது இடத்திலிருந்த பிராட் ஏழு இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இரண்டு இடங்கள் சரிவடைந்து ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அதேபோல் ஏழாவது இடத்தில் இருந்த இந்தியா வீரர் பும்ரா எட்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இப்பட்டியலில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் முதலிடத்திலும் நியூசிலாந்து பந்துவீச்சாளர் நைல் வாக்னர் இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.