ETV Bharat / sports

ஒன் டே மேட்சுக்கு அஸ்வின திரும்ப கூப்பிடுங்கப்பா - ஹர்பஜன் சிங்

author img

By

Published : Nov 21, 2019, 7:38 PM IST

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Ashwin

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித போட்டிகளிலும் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிவருகிறார். 2017இல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு அவர் ஒருநாள், டி20 தொடருக்கான இந்திய அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார்.

இதனால், ஒருநாள் போட்டிகளில் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது முக்கிய சுழற்பந்துவீச்சாளராக திகழ்கின்றனர். அதேபோல், டி20 போட்டிகளைப் பொறுத்த வரையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பெரும்பாலான போட்டிகளில் விளையாடிவருகிறார்.

அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும் ஒருநாள், டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் அவருக்கு இடம்கிடைக்கவில்லை. தற்போது அஸ்வின் நாளை நடைபெறவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

இதனிடையே, ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் அஸ்வினை சேர்த்துகொள்ளுங்கள் என இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

டி20 போட்டிகளில் ரன்களை குறைக்க (வாஷிங்டன் சுந்தரைப் போன்று) சுழற்பந்துவீச்சாளரைத் தேடும்போது, ஏன் விக்கெட் வீழ்த்தும் சுழற்பந்துவீச்சாளரான அஸ்வினுக்கு அணியில் ஒரு வாய்ப்பு கொடுக்ககூடாது. அவர் சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். அவர் பந்தை நன்கு சுழல வைப்பது மட்டுமின்றி, பந்துவீச்சில் பல வெரைட்டிகளையும் வெளிப்படுத்துவார்.

வாஷிங்டன் சுந்தர் போன்று இளம் வீரர் நன்கு விளையாட வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன். இளம் வீரர்களுக்கு எப்போதும் நான் ஆதரவு தருவேன். ஆனால், க தங்களது திறமையை வெளிப்படுத்த அவர்கள் ஏரளாமான விஷயங்களை கற்றுகொள்ள வேண்டும். இல்லையெனில் கடும்போட்டி நிலவும் இந்த சுழலில் அவர்கள் அணியிலிருந்து மாற்றப்படுவார்கள் என தெரிவித்தார். அஸ்வினின் பந்துவீச்சை குறித்து விமர்சித்துவந்த ஹர்பஜன் சிங் தற்போது அவருக்கு ஆதரவாக பேசியது, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஒருநாள் போட்டியில் முதன்மை சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் இருந்தாலும், அவர்கள் சமீபத்திய டி20 போட்டியில் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தனர். பின் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் மூலம், சாஹல் மீண்டும் டி20 போட்டியில் ரிஎன்ட்ரி தந்தார்.

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், ‘குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் விக்கெட் எடுக்கும் சுழற்பந்துவீச்சாளர்கள். குல்தீப் யாதவாக இருந்தாலும் சரி, சாஹலாக இருந்தாலும் யார் விக்கெட் எடுக்கும் சுழற்பந்துவீச்சாளராக இருக்கிறார்களோ அவர்கள் அணியில் இடம்பெற வேண்டும்’ என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.