ETV Bharat / sports

பாக்ஸிங் டே டெஸ்ட்: வார்னர், அபேட் விலகல் - சீன் அபேட்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் டேவிட் வார்னர், சீன் அபேட் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

Boxing Day Test: David Warner and Sean Abbott ruled out of 2nd Test vs India

author img

By

Published : Dec 23, 2020, 3:41 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி டிச.26ஆம் தேதி மெல்போர்னில் தொடங்கவுள்ளது.

வார்னர், அபேட் விலகல்

முதல் ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய டேவிட் வார்னர், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் நிச்சயம் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

  • It has been confirmed that the groin injury will keep star opener, David Warner, out of the Boxing Day Test as well 🤕

    Will Australia stick with Matthew Wade and Joe Burns at the top of the order in Warner's absence? 🧐#AUSvIND pic.twitter.com/NT2Us0xbDe

    — ICC (@ICC) December 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆனால் அவரது காயம் இன்னும் குணமடையாத காரணத்தால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியிலிருந்தும் வார்னர் விலகியுள்ளார். அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் சீன் அபேட்டும் விலகியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அறிக்கை

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வார்னர் மற்றும் சீன் அபேட் ஆகிய இருவரும் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் காயம் இன்னும் குணமடையாத காரணத்தால் அவர்களால், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இயலாது” என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பீலேவின் சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.