ETV Bharat / sports

தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு வாக்களிக்க தடைவிதித்த பிசிசிஐ! - ரூபா குருநாத்

அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐ தேர்தலில் வாக்களிக்க தமிழ்நாடு, மகாராஷ்ட்டிரா, ஹரியானா, மணிப்பூர், உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கிரிக்கெட் நிர்வாகக் குழு தடை விதித்துள்ளது.

பிசிசிஐ
author img

By

Published : Oct 10, 2019, 10:31 PM IST

வருகிற அக்.23ஆம் தேதி பிசிசிஐ அலுவலர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொள்வதற்கும், வாக்களிப்பதற்கும் ஐந்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கிரிக்கெட் நிர்வாக குழு சார்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது என அதனை சீர்திருத்தம் செய்தவதற்காக உச்சநீதிமன்றத்தால் கிரிக்கெட் நிர்வாகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த கிரிக்கெட் நிர்வாகக் குழு அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டது. இதனை பெரும்பாலான கிரிக்கெட் சங்கங்கள் அமல்படுத்தாமல், உத்தரவினை மீறியும் செயல்பட்டன.

இந்நிலையில் பிசிசிஐ-இன் வாரிய பொதுக்குழு கூட்டத்தோடு இணைந்து அதன் தேர்தலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

ரூபா குருநாத்
ஸ்ரீனிவாசன் - ரூபா குருநாத்

அதில் சில நாட்களுக்கு முன்னதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக ரூபா குருநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னாள் தலைவரான ஸ்ரீனிவாசனின் மகளாவார்.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட லோதா கமிட்டியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத மற்றும் பின்பற்றாத கிரிக்கெட் சங்கங்கள் பிசிசிஐ வாரியக் குழு கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்றும், தேர்தலில் வாக்களிக்க தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. ’

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரூபா குருநாத் பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது பல்வேறு தரப்பினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: நாத்திகர்களுக்கும் பிடித்த கடவுள் 'சச்சின் டெண்டுல்கர்!'

Intro:Body:

Tamil Nadu, Haryana, Maharashtra, Manipur and Uttar Pradesh cricket associations do not feature in the final electoral roll for the Board of Control for Cricket in India (BCCI) election scheduled to be held on 23rd October.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.