ETV Bharat / sports

பிக் பாஷ் டி20: விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் குட்டிக்கரணம் போட்ட வீரர்: காணொலி வைரல் - BBL T20

பிக் பாஷ் டி20 கிரிக்கெட் தொடரில் ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணியில் விளையாடிவரும் இளம் வீரர் ஒருவர் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மைதானத்தில் குட்டிக்கரணம் அடித்த காணொலி இணையத்தில் வேகமாகப் பரவிவருகிறது.

Qais Ahmad, குவாயிஸ் அகமது
Qais Ahmad
author img

By

Published : Dec 20, 2019, 5:27 PM IST

கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு ரன்கள் அடிப்பது பெருமையென்றால் பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட் எடுப்பதிலேயே பெருமை கிடைக்கிறது. அவ்வாறு விக்கெட் எடுக்கும் சமயங்களில் ஒவ்வொரு பந்துவீச்சாளரும் தங்களுக்கே உரிய பாணியில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதுண்டு. அவர்கள் வெளிப்படுத்தும் அந்த மகிழ்ச்சியானது சில நேரங்களில் வித்தியாசமாக இருப்பதோடு மைதானத்தில் இருக்கும் அனைவரையும் குஷிப்படுத்தவும் செய்கிறது.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் தற்போது தொடங்கியுள்ள பிக் பாஷ் டி20 தொடரில் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இளம் ஸ்பின்னர் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹோபார்ட் அணி தட்டுத்தடுமாறி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களைக் குவித்தது.

இந்தச் சிறிய ஸ்கோரை எப்படி டிபெண்ட் செய்யப் போகிறார்கள் என ஹோபார்ட் ரசிகர்கள் நினைத்திருந்த வேளையில், அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் துடிப்புடன் செயல்பட்டதால் சிட்னி சிக்சர்ஸ் அணி 18.5 ஓவர்களிலேயே 104 ரன்களுக்கு ஆட்டமிழந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

இப்போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய ஹோபார்ட் அணியில் உள்ள ஆப்கன் ஸ்பின்னர் குவாயிஸ் அகமது நான்கு ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதிலும் அவர் பத்தாவது ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அந்த ஓவரின் முதல் பந்தில் சிட்னி அணியின் டாம் பேன்டனை தனது லெக் ப்ரேக்கின்மூலம் க்ளீன் போல்டாக்கினார். இந்த விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த குவாயிஸ் அகமது, உற்சாக மிகுதியில் காற்றில் குட்டிக் கரணம் அடித்தார்.

அவர் குட்டிக்கரணம் போட்ட இந்தக் காணொலியை பிக் பாஷ் டி20 தொடரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். இதைத் தொடர்ந்து இந்தக் காணொலி அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: ஐபிஎல் ஏலத்தில் கவனம் ஈர்த்த தமிழ்நாட்டு வீரர்கள்!

Intro:Body:

https://twitter.com/BBL/status/1207910417265086465

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.