இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 59 ரனகள் வித்தியாசத்தில் ’டக்வர்த் லூயீஸ்’(DLS) முறையில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதமடித்து அசத்த, பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
-
What a catch by #bhuvi @BhuviOfficial @BCCI pic.twitter.com/t9aHZBqMx3
— Prasad prabhudesai (@Prasadprabhude2) August 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What a catch by #bhuvi @BhuviOfficial @BCCI pic.twitter.com/t9aHZBqMx3
— Prasad prabhudesai (@Prasadprabhude2) August 11, 2019What a catch by #bhuvi @BhuviOfficial @BCCI pic.twitter.com/t9aHZBqMx3
— Prasad prabhudesai (@Prasadprabhude2) August 11, 2019
இதில் ஆட்டத்தின் 34ஆவது ஒவரின் ஐந்தாவது பந்தில் புவனேஸ்வர்குமார், தனது பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸின் விக்கெட்டை அவரே கேட்ச் பிடித்து வெளியேற்றினார். அவர் கேட்ச் பிடிக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புவனேஷ்வர் குமார் இந்த ஆட்டத்தில் 31 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டிரினிடாட் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அயல்நாட்டுப் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.