தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகின்றது. இவ்விரு அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஜோகன்ஸ்பர்க்கில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடியது. இதில் மூன்றாம் நிலை வீரராகக் களமிறங்கிய ஸ்டோக்ஸ், அன்ரீஜ் நோர்டிச் பந்துவீச்சில் இரண்டு ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது அவர் டிரஸிங் ரூமிற்கு சென்றுகொண்டிருக்கும்போது தன்னைப்பற்றி விமர்சனம்செய்த ரசிகர் ஒருவரை ஆபாச வார்த்தைகளினால் திட்டியுள்ளார்.
இதனையடுத்து நேற்று தனது தவறை உணர்ந்த ஸ்டோக்ஸ், அவரது ட்விட்டர் பக்கத்தில் அந்த நபருக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இருப்பினும் இவரது செயல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒழுங்கு நடத்தை விதிகளின்படி தவறு என்பதால், நேற்று ஐசிசி அவருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவிகிதம் அபராதமும், ஒரு மதிப்பிழப்பு புள்ளியையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
-
Ben Stokes has been fined 15% of his match fee and handed one demerit point after being found guilty of breaching the ICC Code of Conduct for using obscene language on day one of the Johannesburg Test.
— ICC (@ICC) January 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Details: https://t.co/ww5U109PR9 pic.twitter.com/E1hxa1j5Dy
">Ben Stokes has been fined 15% of his match fee and handed one demerit point after being found guilty of breaching the ICC Code of Conduct for using obscene language on day one of the Johannesburg Test.
— ICC (@ICC) January 25, 2020
Details: https://t.co/ww5U109PR9 pic.twitter.com/E1hxa1j5DyBen Stokes has been fined 15% of his match fee and handed one demerit point after being found guilty of breaching the ICC Code of Conduct for using obscene language on day one of the Johannesburg Test.
— ICC (@ICC) January 25, 2020
Details: https://t.co/ww5U109PR9 pic.twitter.com/E1hxa1j5Dy
கடந்த 24 மாதங்களில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் பெரும் முதல் மதிப்பிழப்பு புள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணியின் 'புதிய பெருஞ்சுவர்' புஜாரா!