2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பவுண்டரிகள் அடிப்படையில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, முதல் முறையாக உலகக்கோப்பை தொடரை வென்று சாதனை படைத்தது.
மேலும் இங்கிலாந்து அணி அந்த உலகக்கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியவர் அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இதற்காக அவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ள நிலையில் தற்போது மீண்டும்மொறு கவுரவுமும் அவருக்கு சொந்தமாகியுள்ளது. இங்கிலாந்து அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான, பிரிட்டிஷ் பேரரசின் மிகச் சிறந்த ஒழுங்கின் அதிகாரி விருதை பென் ஸ்டோக்ஸுக்கு வழங்கி கவுரவித்திருக்கிறது.
அதே போல் இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த ஜோஸ் பட்லர், இயன் மோர்கன், ஜோ ரூட், ட்ரெவர் பெலிஸ் ஆகியோருக்கும் இங்கிலாந்து அரசு உயரிய விருதுகளை வழங்கியுள்ளது. மேலும் இந்த விருதுகளை இளவரசர் வில்லியம் வீரர்களுக்கு வழ்ங்கி கவுரவித்தார்.
*பிரிட்டிஷ் பேரரசின் மிகச் சிறந்த ஒழுங்கின் அதிகாரி(ஒபிஇ) - Officer of the Most Excellent Order of the British Empire
*பிரிட்டிஷ் பேரரசின் மிகச் சிறந்த ஒழுங்கின் உறுப்பினர்(எம்பிஇ)- Member of the Most Excellent Order of the British Empire
பக்கிங்ஹாமில் விருது பெற்றவர்களின் பட்டியல்:
வீரர் | விருது |
பென் ஸ்டோக்ஸ் | பிரிட்டிஷ் பேரரசின் மிகச் சிறந்த ஒழுங்கின் அதிகாரி(ஒபிஇ) |
ஜோஸ் பட்லர் | பிரிட்டிஷ் பேரரசின் மிகச் சிறந்த ஒழுங்கின் உறுப்பினர்(எம்பிஇ) |
ஈயன் மோர்கன் | பிரிட்டிஷ் பேரரசின் மிகச் சிறந்த ஒழுங்கின் அதிகாரி(ஒபிஇ) |
ட்ரெவர் பெலிஸ் | பிரிட்டிஷ் பேரரசின் மிகச் சிறந்த ஒழுங்கின் அதிகாரி(ஒபிஇ) |
ஜோ ரூட் | பிரிட்டிஷ் பேரரசின் மிகச் சிறந்த ஒழுங்கின் உறுப்பினர்(எம்பிஇ) |
இதையும் படிங்க: கொரோனாவால் தடை செய்யப்படுமா ஒலிம்பிக்?