இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழுதான் வழக்கமாகத் தேர்வு செய்யும். ஆனால், டெண்டுல்கர், கங்குலி, லட்சுமண் ஆகியோர் ஒரே நேரத்தில், கிரிக்கெட் தொடர்பான அமைப்பில் இரட்டைப் பதவிகளை வகிப்பதாக சர்ச்சை கிளம்பியது.
இதையடுத்து, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு - முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான குழுவிடம் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பொறுப்பு ஒப்படைத்தது.
இதன்படி, கபில்தேவ் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரைத் தேர்வு செய்வதற்காக மும்பை சென்றுள்ளார். இது தொடர்பாக தற்போது அவர் ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.