இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கபில் தேவ், கங்குலி, சச்சின், யுவராஜ் சிங், தோனி, ஆகியோர் பல மறக்க முடியாத தருணங்களை ரசிகர்களுக்கு தந்துள்ளனர். அந்த வரிசையில் வெங்கடேஷ் பிரசாத் தந்த தருணம், கிரிக்கெட்டின் ஆக சிறந்த மொமண்ட்டாகவும் இருந்துவருகிறது. லெட் 90ஸ் களில் இந்திய அணிக்குள் பல வீரர்கள் நுழைந்தனர். அதில், வெங்கடேஷ் பிரசாத்தும் ஒருவர்.
வலதுகை மிடியம் ஃபாஸ்ட் பவுலரான இவர், தனது அபரமான பந்துவீச்சின் மூலம் அணியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். பின்னர், தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம், அப்போதைய இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருந்த ஜவகல் ஸ்ரீநாத்தின் பவுலிங் பார்ட்னராகவும் இருந்தார். இவ்விரு வீரர்களும் முதல் பத்து ஓவர்களில் பல எதிரணி வீரர்களை திணறடித்துள்ளனர்.
1996 உலகக்கோப்பையை வெங்கடேஷ் பிரசாத் மட்டுமின்றி இந்திய ரசிகர்களாலும் மறக்கமுடியாதவை. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில், 288 ரன்கள் இலக்குடன் இறங்கிய பாகிஸ்தான் அணி வெங்கடேஷ் பிரசாத் வீசிய 15ஆவது ஓவரின் நான்காவது பந்தை அந்த அணியின் வீரர் ஆமிர் சோஹைல் ஆஃப் சைட் திசையில் பவுண்ட்ரி அடித்தார்.
பொதுவாக, கிரிக்கெட்டில் பவுலர்கள்தான் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களை ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்துவது வழக்கம். ஆனால், இப்போட்டியில் அனைத்தும் தலைகீழாக நடந்தது. பவுண்ட்ரி அடித்தவுடன் ஆமிர் சோஹைல், வெங்கடேஷ் பிரசாத்திடம் உன் பவுலிங்கை பவுண்ட்ரிக்கு விரட்றேன் பார் என்று தனது பேட்டால் கூறினார்.
-
This moment is etched forever in every cricket fan's minds. Perfect time to take everyone in a rewind!!! Happy Birthday Venkatesh Prasad! pic.twitter.com/53tudIiSA4
— BCCI (@BCCI) August 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This moment is etched forever in every cricket fan's minds. Perfect time to take everyone in a rewind!!! Happy Birthday Venkatesh Prasad! pic.twitter.com/53tudIiSA4
— BCCI (@BCCI) August 5, 2019This moment is etched forever in every cricket fan's minds. Perfect time to take everyone in a rewind!!! Happy Birthday Venkatesh Prasad! pic.twitter.com/53tudIiSA4
— BCCI (@BCCI) August 5, 2019
பின்னர், அடுத்த பந்திலேயே வெங்கடேஷ் பிரசாத், ஆமிர் சோஹைலை க்ளின் போல்ட் ஆகி, உன்ன நான் போல்ட் ஆகிட்டேன் பெவிலியனுக்கு கிளம்பு என்று ஆக்ஷ்னில் பதிலடி கொடுப்பார். இதனால், பெங்களூரு சின்னசாமி மைதானமே கரகோஷத்தால் ஸ்தம்பித்தது.
'Well thats the way you can answer it' என்று ரவி சாஸ்திரியின் கமெண்ட்ரி இந்த மொமண்ட்டை அழகு சேர்த்தது. கிரிக்கெட்டில் முற்பகல் செய்யும் பிற்பகல் விளையும் என்பது நவீன காலத்தில்' karma is a boomerag' என்று மாற்றப்பட்டது. இதை 1996இல் இந்திய பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் நிரூபித்திக்காட்டினார்.
ஆமிர் சோஹைலின் விக்கெட் வீழ்ந்தவுடன் பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதியடைந்தது. அதேசமயம், ஸ்லெட்ஜிங்கில் வார்த்தையின் மூலம் பதில் கூறாமல் ஆக்ஷன் மூலம் பதலிளித்து காலரை தூக்கினார் வெங்கடேஷ் பிரசாத்.இந்தியா - பாகிஸ்தான் இடையே பலமறக்க முடியாத தருணங்கள் இடம்பெற்றாலும் வெங்கடேஷ் பிரசாத்தின் இந்த மொமண்டுக்கு எப்போதும் தனி இடமுண்டு.
சுரியவம்சம் படத்தில் சின்ராசு கையல பிடிக்கவே முடியாது என்ற வசனத்தை போல, 1996 உலகக்கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தான் அணி என்றாலே வெங்கடேஷ் பிரசாத்தை கையில் பிடிக்க முடியாது. ஏனெனில் டெஸ்ட், ஒருநாள் இரண்டிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராகதான் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
1999 சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.இதில், இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் சச்சின், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழந்து 275 ரன்கள் எடுத்திருந்த பாகிஸ்தான் அணி, இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியமால் 286 ரன்களுக்கே சுருண்டது. இப்போட்டியில் வெங்கடேஷ் பிரசாத் 10.2 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே தந்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதேபோல், 1999இல் இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே கார்கில் போர் நடைபெற்ற போதிலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.இதில், 228 ரன்கள் இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி வெங்கடேஷ் பிரசாத்தின் பந்துவீச்சுக்கு பதில் தெரியாமல் 180 ரனக்ளுக்கு ஆல் அவுட் ஆனது. இப்போட்டியில் வெங்கடேஷ் பிரசாத் 9.2 ஓவர்களில் 27 ரன்களை வழங்கி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பவுலிங்கில் மறக்கமுடியாத தருணங்களை தந்த வெங்கடேஷ் பிரசாத், 2000இல் பேட்டிங்கிலும் தந்த மொமண்ட்டை மீண்டும் உருவாக்கினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி நாக் அவுட் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.இதில், இந்திய அணியின் கடைசி பந்தை எதிர்கொண்ட வெங்கடேஷ் பிரசாத் சிக்சர் விளாசி அசத்தினார்.
இந்திய அணிக்காக 33 டெஸ்ட், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வெங்கடேஷ் பிரசாத் இதுவரை 292 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் ஸ்லோயர் பந்துகளை முதலில் அறிமுகப்படுத்தியவரும் இவரே. தற்போது இவர் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளருக்கு விண்ணப்பித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே பலமறக்க முடியாத தருணங்கள் இடம்பெற்றாலும் வெங்கடேஷ் பிரசாத்தின் இந்த மொமண்டுக்கு எப்போதும் தனி இடமுண்டு. இப்படி கிரிக்கெட்டின் ஆக சிறந்த மொமண்ட்டுக்கு சொந்தக்காரராக திகழும் வெங்கடேஷ் பிரசாத் தனது 50ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.