ETV Bharat / sports

பயங்கரவாத தாக்குதல் இருக்காது என  பிசிபி உத்தரவாதம் தர வேண்டும் - பிசிசிஐ! - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அலுவலர் வாசிம் கான்

2021 இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா பெறுவதில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது என்பதை பிசிசிஐ எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பிசிபி ஐசிசியிடம் கேட்டுக் கொண்ட நிலையில் நாட்டின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபடாது என்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது

BCCI asks for 'no terror attack guarantee' from PCB

author img

By

Published : Jun 26, 2020, 4:21 AM IST

இந்தியாவில் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரும் 2023இல் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரும் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா பெறுவதிலும், கிரிக்கெட் விளையாட அனுமதி வழங்குவதிலும் இந்திய அரசாங்கம் எந்தவித பிரச்னையும் ஏற்படுத்தாது என்பதை பிசிசிஐயிடமிருந்தது எழுத்துப்பூர்வமாக உத்தரவாதங்களை வழங்குமாறு ஐசிசி இடம் நாங்கள் ஏற்கனவே கேட்டுக்கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அலுவலர் வாசிம்கான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக, பிசிசிஐயின் மூத்த அலுவலர் ஒருவர், கிரிக்கெட் தொடர்களை நடத்துவதில் அரசாங்கத்தின் தலையீடுகள் இருக்கக்கூடாது. அதே சமயம் கிரிக்கெட் வாரியங்களும் அரசாங்கத்தின் விஷயங்களில் ஈடுபடக்கூடாது என்பது ஐசிசியின் விதிமுறையாகும்.

அப்படியிருக்கும் போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது வீரர்களுக்கு விசா வழங்குவது தொடர்பாக எங்களிடம் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் கேட்டுள்ளது.

எனவே, நாட்டின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல்களை நடத்தாது என்பதை எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும்.இந்தியாவுக்கு எதிராக ஐசிசியின் ஏஜெண்டை போல நடந்து கொள்வதை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என தெரிவித்தார்.

கடந்த ஆண்டு புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்ததையடுத்து இந்தியாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் உலக கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.