வளர்ந்து வரும் அசிய அணி கோப்பைக்கான ஒருநாள் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா அண்டர் 23 அணி, வங்கதேச அண்டர் 23 அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைதொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய அர்மாண் ஜாஃபர் சதமடித்து அசத்தினார்.
இதன் மூலம் இந்திய அண்டர் 23 அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் அர்மாண் ஜாஃபர் 105 ரன்களை எடுத்தார். வங்கதேச அணி சார்பில் சுமொன் கான் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின் அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியில் சௌமியா சர்கார், நஜ்முல் ஹொசைன் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை மளமளவென உயர்த்தினர்.
இதன் மூலம் வங்கதேச அணி 42.1 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் 94 ரன்களையும், சௌமியா சர்கார் 73 ரன்களையும் குவித்தனர்.
இதனால் வங்கதேச அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அண்டர் 23 அணியை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தைப்பிடித்து அசத்தியுள்ளது.
மேலும் இன்று இந்தியா - வங்கதேச அணிகளின் சீனியர் வீரர்களுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வங்தேச அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 3 நாட்களில் டெஸ்ட் மேட்சை முடித்த இந்தியா!