ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று தொடங்கியது. மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ், முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் பந்தில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார். இதையடுத்து டேவிட் வார்னர், லாபுசாக்னே ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர் வார்னர் 41, சாக்னே 63, வேட் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இப்போட்டியில சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், தனது வழக்கமான பாணியில் ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவர் டெஸ்ட் போட்டியில் தனது 28ஆவது அரைசதத்தை நிறைவு செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 257 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஸ்மித் 77 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இப்போட்டியில் ஸ்மித் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான கிரேக் சாப்பல் அடித்த 7110 ரன்களைக் கடந்து, ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனைப் பட்டியலில் 10ஆவது இடம் பிடித்துள்ளார்.
-
Another day, another milestone for Steve Smith 🙌
— ICC (@ICC) December 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
He enters the top 10 of the all-time leading run-scorers for Australia in Tests!#AUSvNZ pic.twitter.com/GspcvjjQ0J
">Another day, another milestone for Steve Smith 🙌
— ICC (@ICC) December 26, 2019
He enters the top 10 of the all-time leading run-scorers for Australia in Tests!#AUSvNZ pic.twitter.com/GspcvjjQ0JAnother day, another milestone for Steve Smith 🙌
— ICC (@ICC) December 26, 2019
He enters the top 10 of the all-time leading run-scorers for Australia in Tests!#AUSvNZ pic.twitter.com/GspcvjjQ0J
இப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பாண்டிங் (13,378 ரன்கள்), ஆலன் பார்டர் (11,174), ஸ்டீவ் வாக் (10,927) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் ஸ்டீவ் ஸ்மித், சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.