சிட்னியில் நேற்று நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 375 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இப்போட்டியில் 50 ஓவர்களை வீசுவதற்கு இந்திய அணி 4 மணிநேரத்திற்கும் அதிகமாக எடுத்துக் கொண்டது. அதாவது ஆஸ்திரேலிய நேரப்படி இந்தப் போட்டி இரவு 10.15 மணிக்குள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் இப்போட்டி இரவு 11.40 மணிக்குத்தான் முடிந்தது. இது ஐசிசியின் ஒழுங்கு விதிகளின்படி குற்றமாகும்.
இது குறித்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில், "ஐசிசி ஒழுங்கு விதிகளின்படி, பந்துவீசுவதற்கு வழங்கப்பட்ட குறிப்பிட்ட கால அவகாசத்தைவிட அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டல் போட்டித் தொகையிலிருந்து 20 விழுக்காடு அபராதம் விதிக்கப்படும். அதன்படி, இந்திய அணியினர் பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதால், அவர்களுக்குப் போட்டி கட்டணத்திலிருந்து 20 விழுக்காடு அபராதமாக விதிக்கப்படுகிறது.
-
India players have been fined for maintaining a slow over-rate in their 1st ICC Men's @cricketworldcup Super League ODI against Australia.
— ICC (@ICC) November 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Details 👇
">India players have been fined for maintaining a slow over-rate in their 1st ICC Men's @cricketworldcup Super League ODI against Australia.
— ICC (@ICC) November 28, 2020
Details 👇India players have been fined for maintaining a slow over-rate in their 1st ICC Men's @cricketworldcup Super League ODI against Australia.
— ICC (@ICC) November 28, 2020
Details 👇
மேலும் இப்போட்டி குறித்து கள நடுவர்கள், மூன்றாவது, நான்காவது நடுவர்களும் புகாரளித்துள்ளனர். இது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேரில் விளக்கமளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: டிச. 18ஆம் தேதியன்று இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தேர்தல்!