தற்போது நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் விலகுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. மூன்றாவது போட்டி வரும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்காக வலைபயிற்சி செய்யும்போது கே.எல்.ராகுல் இடது கை மற்றும் மணிக்கட்டில் பலத்தக்காயம் ஏற்பட்டது.
-
UPDATE: KL Rahul ruled out of Border-Gavaskar Trophy.
— BCCI (@BCCI) January 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
More details 👉 https://t.co/G5KLPDLnrv pic.twitter.com/S5z5G3QC2L
">UPDATE: KL Rahul ruled out of Border-Gavaskar Trophy.
— BCCI (@BCCI) January 5, 2021
More details 👉 https://t.co/G5KLPDLnrv pic.twitter.com/S5z5G3QC2LUPDATE: KL Rahul ruled out of Border-Gavaskar Trophy.
— BCCI (@BCCI) January 5, 2021
More details 👉 https://t.co/G5KLPDLnrv pic.twitter.com/S5z5G3QC2L
இதன் காரணமாக அவர் தொடரிலிருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கே.எல்.ராகுல் தனது காயங்களிலிருந்து முழுமையாக குணமடைய இன்னும் மூன்று வாரங்கள் தேவைப்படும். இதன் காரணமாக அவர், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு திரும்பவுள்ளார்.
இதையும் படிங்க:மெல்போர்னில் மாஸ் காட்டிய அஸ்வின் - முரளி சாதனை முறியடிப்பு