ETV Bharat / sports

2ஆவது ஒருநாள்: தொடரைத் தன்வசப்படுத்துமா இந்தியா? - நடராஜன் தங்கராசு

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

AUS vs IND, 2nd ODI: After 66 runs drubbing, India need to strike right balance to save series

author img

By

Published : Nov 28, 2020, 5:30 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்நிலையில் இத்தொடரின் இரண்டாவது போட்டி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை காலை 9.10 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் மட்டுமே ஒருநாள் தொடரை தக்கவைக்கும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணி:

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, நேற்று பேட்டிங், பவுலிங் என இரு தரப்பிலும் சொதப்பியதால் தோல்வியைச் சந்தித்தது. அதிலும் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்கத் தவறியதாலும், ரன்களைக் கட்டுப்படுத்தவும் தவறினர்.

பின்னர் பேட்டிங்கைப் பொறுத்தவரை ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா ஆகியோரைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். இதனால் நாளைய போட்டியின்போது இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி பந்துவீச்சில் புதுமுக வீரர் நடராஜன் இடம்பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஐபிஎல் தொடரில் தனது யார்க்கர் பந்துவீச்சால் எதிரணியினரை திக்குமுக்காடச் செய்த நடராஜன், சர்வதேச போட்டியிலும் அதனைச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடராஜன் தங்கராசு
நடராஜன் தங்கராசு

பேட்டிங் வரிசையைப் பொறுத்தவரையில் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் மனீஷ் பாண்டே இறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில் சூழல் அறிந்து அதற்கேற்ப மனீஷ் பாண்டே அணிக்கு உதவுவார் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் பந்துவீச்சில் ஜாஸ்பிரீத் பும்ரா, ஷமி ஆகியோர் ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் நாளையப் போட்டியும் சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளதால், இந்திய அணியில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் மட்டுமே இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதுவாயினும், நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் மட்டுமே ஒருநாள் தொடரை தக்கவைக்க முடியும் என்பதால், இப்போட்டியில் வெல்வதற்கான வியூகங்களை இந்திய அணி வகுத்திருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச், ஸ்டீவ் ஸ்மித், வார்னர், மேக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால், இந்திய அணியுடனான முதல் போட்டியை 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

பேட்டிங், பந்துவீச்சு என இரு தரப்பிலும் பலமான அணியாக விளங்கும் ஆஸ்திரேலியா நாளைய போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்போடு உள்ளது.

ஆரோன் ஃபின்ச் - ஸ்டீவ் ஸ்மித்
ஆரோன் ஃபின்ச் - ஸ்டீவ் ஸ்மித்

மேலும் அந்த அணியில் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸிற்கு பதிலாக கிறிஸ் கிரீன் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெறும்பட்சத்தில் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டியா, மயாங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷார்துல் தாக்கூர், சஞ்சு சாம்சன், நடராஜன்.

ஆஸ்திரேலிய அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லாபூசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மத்தேயு வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

இதையும் படிங்க:'என்னை மன்னித்துவிடுங்கள் ராகுல்' - வைரலாகும் மேக்ஸ்வெல் ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.