ETV Bharat / sports

'அஸ்வின் 800 விக்கெட்டுகளை கைப்பற்ற வாய்ப்புண்டு' - முத்தையா முரளிதரன்! - நாதன் லயன்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் 700 - 800 விக்கெட்டுகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Ashwin can take 800 wickets, Lyon not good enough, says Muralitharan

author img

By

Published : Jan 14, 2021, 2:17 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்பேனில் தொடங்கவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச டெஸ்டில் 700 முதல் 800 விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்புள்ளதாகவும், ஆனால் நாதன் லயனால் அதனை எட்டுவது கடினம் என்றும் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய முரளிதரன், "அஸ்வின் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்பதால் அவருக்கு சர்வதேச டெஸ்டில் 700 முதல் 800 விக்கெட்டுகளை எடுக்க ஒரு வாய்ப்பு உள்ளது. தற்போதுள்ள கிரிக்கெட்டில் வேறு எவரும் அதனை எட்டமுடியுமா என்பது சந்தேகம்தான்.

ஒருவேளை நாதன் லயன் இதனை செய்ய முயற்சித்தாலும், அவரால் முடியுமா என்பது சந்தேகம்தான். ஏனேனில் அவர் 400 விக்கெட்டுகளை எடுப்பதற்கே பல போட்டிகளில் விளையாட வேண்டி இருக்கிறது. அதனால் இன்னும் 400 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ரவிச்சந்திர அஸ்வின் இதுவரை 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 377 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் 99 போட்டிகளில் விளையாடி 396 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐஎஸ்எல்: ஒடிசாவை வீழ்த்தியது சென்னையின் எஃப்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.