எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இதன்மூலம் 2001ஆம் ஆண்டிலிருந்து எட்ஜ்பாஸ்டனில் நடந்த எந்த போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வென்றதில்லை என்ற மோசமான வரலாற்றை மாற்றியது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 14ஆம் தேதி லார்ட்ஸில் தொடங்குகிறது. இதில், வென்றாக வேண்டும் என்ற முனைப்புடன் வீரர்களை இங்கிலாந்து அணி தேர்வு செய்துள்ளது. அதில், ஆல்-ரவுண்டர் மொயீன் அலிக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மாதம் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முழங்கால் காயம் காரணமாகவும், ஆலி ஸ்டோன் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமகவும் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இடம்பெற்றுள்ளார்.
இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட்க்குகான இங்கிலாந்து அணி:
ஜோ ரூட் (இ), ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் குர்ரான், ஜோ டென்லி, ஜாக் லீச், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.