ETV Bharat / sports

'நீங்கள் எடுத்த முடிவு சரிதான்... நான் உங்களுடன் இருக்கிறேன்' - அனில் கும்ப்ளே - உத்தராகாண்ட் கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பதிவிட்ட ட்விட்டர் பதிவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

"Did Right Thing": Anil Kumble Backs Wasim Jaffer In 'Communal Bias' Row

author img

By

Published : Feb 11, 2021, 5:07 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவர் உத்தராகாண்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், உத்தரகாண்ட் அணியில் வீரர்களை, அவர்களது மதத்தின் அடிப்படையில் விளையாட தேர்ந்தெடுத்ததாக சங்கத்தின் செயலாளர் மஹிம் வர்மா அவர் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த ஜாஃபர், தனது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்தும் விலகினார்.

இதுகுறித்து வாசிம் ஜாபர் தனது ட்விட்டர் பதிவில், “சிபாரிசு செய்வதாக சொல்லி தகுதியும், திறனும் இல்லாத வீரர்களை அணிக்குள் சேர்க்கும்படி நிர்பந்தித்தனர். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதனால் இது மாதிரியான பொய்யான குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்” என பதிவிட்டுள்ளார்.

  • With you Wasim. Did the right thing. Unfortunately it’s the players who’ll miss your mentor ship.

    — Anil Kumble (@anilkumble1074) February 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் ஜாஃபருக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தனது ட்விட்டர் பதிவில், “நான் உங்கள் பக்கம் இருக்கிறேன் வாசிம். நீங்கள் சரியானதைதான் செய்துள்ளீர்கள். உங்கள் வழிகாட்டுதலை இழந்தது அந்த வீரர்களின் துரதிர்ஷ்டம்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் ஹசாரே கோப்பை: தமிழ்நாடு அணியிலிருந்து நடராஜன் விடுவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.