ETV Bharat / sports

ரஞ்சி தொடர்: 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய ஆதித்யா

டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் விதர்பா அணி பந்துவீச்சாளர் ஆதித்யா தாக்கரே 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

aditya-thackarey-got-7-wickets-against-delhi-in-ranji-trophy

author img

By

Published : Jan 21, 2020, 12:45 PM IST

2019-20ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடரின் குரூப் சுற்றில் டெல்லி அணியை எதிர்த்து விதர்பா அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் துருவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணியை விதர்பா பந்துவீச்சாளர் ஆதித்யா தாக்கரே, தனது ஆக்ரோஷமான பந்துவீச்சால் மிரளவைத்தார்.

அவரது பந்துவீச்சில் தொடக்க வீரர்கள் குணால், ஹிட்டென் தலால், கேப்டன் துருவ், நிதீஷ் ராணா, ஜோண்டி சிந்து ஆகியோர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து வரிசையாகப் பெவிலியன் திரும்பினர். இதனால் டெல்லி அணி 62 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சொந்த மண்ணில் பரிதாபமான நிலையில் இருந்தது. இதையடுத்து அனுஜ் ராவத் 37 ரன்களும், பிதாரி 19 ரன்களும் சேர்த்தனர். இறுதியாக, டெல்லி அணி 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதில் விதர்பா அணி சார்பாக ஆதித்யா தாக்கரே 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

நடப்பு சாம்பியனாக களமிறங்கியுள்ள விதர்பா அணி தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடிவருகிறது.

இதையும் படிங்க: முச்சதம் விளாசிய மனோஜ் திவாரி!

Intro:Body:

Aditya Thackarey got 7 wickets against Delhi in Ranji Trophy

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.