WROGN ஆடை நிறுவனம் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் நன்கொடையாளராகச் செயல்பட்டுவருகிறது. இதன் விளம்பர தூதராக விராட் கோலி செயல்பட்டுவந்த நிலையில் மற்றொரு ஆர்சி அணி வீரரான டி வில்லியர்ஸும் விளம்பரத் தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து டி வில்லியர்ஸ் பேசுகையில், ''ஒவ்வொருவரும் அவரவருக்கு வசதியாக இருக்கும் வகையில் ஆடை அணிய வேண்டும். உங்கள் ஆடை உங்களுக்கு வசதியாக இல்லையென்றால் அது மற்றவர்களுக்கு எளிதாக காட்டிக்கொடுத்துவிடும்.
எனவே அனைவரும் மிகவும் இறுக்கமாகவோ, தளர்வாகவோ ஆடைகளைத் தேர்வுசெய்யாமல் சரியான உடைகளைத் தேர்வுசெய்ய வேண்டும்.
நமது ஆடைகள் எப்போதும் நமக்கு நம்பிக்கையை அளிப்பதாக இருக்க வேண்டும். எந்தவிதமான ஆடைகளை அணிய வேண்டும் என்பது அவரவர்களின் விருப்பம்.
எப்போதும் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் ஒன்றாகப் பணியாற்றுவது எங்கள் நட்பினை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. WROGN நிறுவனத்திற்காக அவருடன் பணியாற்றவுள்ளது மகிழ்ச்சியே'' என்றார்.
இதையும் படிங்க: ‘எனக்கு அப்போவே தெரியும்... கோலி பெரிய ஆள் ஆவார்னு’ - பீட்டர்சன் நினைவலைகள்