ETV Bharat / sports

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஏபி டி வில்லியர்ஸ்? - தென் ஆப்பிரிக்க அணி

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ab-de-villers-likely-to-make-international-comeback-against-sri-lanka

author img

By

Published : Mar 4, 2020, 5:32 PM IST

2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த டி வில்லியர்ஸ், ஐபிஎல், பிக் பாஷ் உள்ளிட்ட டி20 தொடர்களில் பங்கேற்று வந்தார். கடந்த ஆண்டு உலகக்கோப்பையின் போது மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கு முடிவெடுத்தார். ஆனால் உலகக்கோப்பைத் தொடரின்போது டி வில்லியர்ஸ் தேர்வு செய்யப்படவில்லை.

ஏபி டி வில்லியர்ஸ்
ஏபி டி வில்லியர்ஸ்

இதையடுத்து பல்வேறு மாற்றங்களுடன் தென் ஆப்பிரிக்க அணி தயாராகி வரும் நிலையில், இந்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்காக களமிறங்க தயாராக இருப்பதாக டி வில்லியர்ஸ் அறிவித்திருந்தார். இதற்கு தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பாசிட்டிவ் சிக்னல் அளித்திருந்தார்.

இதனால் டி வில்லியர்ஸ் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டி வில்லியர்ஸை தென் ஆப்பிரிக்க நிர்வாகம் தேர்வு செய்வில்லை. இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பேசுகையில், '' டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக சில போட்டிகள் மட்டுமே எங்களுக்கு உள்ளது. அதனால் அணிக்கு திரும்ப வேண்டும் என நினைக்கும் வீரர்களான டி வில்லியர்ஸ், மோரிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் ஜூன் 1ஆம் தேதிக்குள் தயாராக இருக்கவேண்டும்.

மார்க் பவுச்சர்
மார்க் பவுச்சர்

அந்த நேரத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகத்தினருக்குத் தாங்கள் தயாராக இருப்பது பற்றிய தகவலை அளிக்கவேண்டும். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படுவார்களா என்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை. தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், அவர்களது நிலையை நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். ஐபிஎல் தொடருக்குப் பின் அவர்களின் நிலை பற்றி தென் ஆப்பிரிக்க நிர்வாகம் முடிவு செய்யும்'' என்றார்.

ஜூன் 1ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தென் ஆப்பிரிக்க அணி பங்கேற்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் இந்த மூன்று வீரர்களின் ஆட்டத்தைப் பார்த்து தென் ஆப்பிரிக்க அணியில் இடம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

ஐபிஎல் தொடரில் டி வில்லியர்ஸ் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் நிச்சயம் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்காக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'சாம்பியன்கள் அவ்வளவு எளிதாக ஓய்ந்துவிட மாட்டார்கள்' - பி.வி. சிந்துவின் கதை...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.