ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பின்ச். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றி தனது சர்வதேச ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய பின்ச்,"வருகிற 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டமே எனது கிரிக்கெட் வாழ்வின் இறுதி நாள். அதுவே எனது குறிக்கோளும் கூட.
மேலும் அத்தொடரின் போது எனக்கு சராசரியாக 36 வயதை அடைந்திருப்பேன். அதன் பிறகும் என்னால் இந்த விளையாட்டில் நீடிக்க முடியுமா என்பது எனக்கு தெரியாது. ஆகையால் தான் உலகக்கோப்பைத் தொடருடன் எனது கிர்க்கெட் பயணத்தை முடித்துகோள்ளத் திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த டி20 உலகக்கோப்பைத் தொடரை, 2022ஆம் ஆண்டிற்கு ஐசிசி ஒத்திவைத்தது. மேலும் 2021ஆம் அண்டு டி20 உலகக்கோப்பைத் தொடர் திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறும் என்றும் ஐசிசி அறிவித்தது.
மேலும் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, சென்ற ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியிடன் தோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்திய அணிக்காக அனைத்து கடினமான பணிகளையும் செய்தவர் ரெய்னா: டிராவிட் புகழாரம்