ETV Bharat / sports

மீண்டும் இனரீதியாக இழிவுப்படுத்தப்பட்ட சிராஜ்; ஆட்டத்தின் இடையே பரபரப்பு!

சிட்னி டெஸ்ட் போட்டியின் போது மைதானத்திலிருந்த ரசிகர்கள் முகமது சிராஜை இன ரீதியாக இழிவுப்படுத்தியதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

A group of spectators were asked to leave on Day 4 of the third Test at the Sydney Cricket Ground on

author img

By

Published : Jan 10, 2021, 10:39 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கி, நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் மைதானத்தின் பவுண்டரி எல்லையில் இருந்த முகமது சிராஜை, அங்கிருந்த ரசிகர்கள் இனரீதியாக இழிவுப்படுத்தியுள்ளனர். இதையடுத்து முகமது சிராஜ், அணி கேப்டன் ரஹானேவிடன் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

பின்னர் ரஹானே இதுகுறித்து கள நடுவர்களிடம் முறையிட்டார். இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் மைதானத்தின் பாதுகாப்பு ஊழியர்கள், முகமது சிராஜை இன ரீதியாக விமர்சித்ததாக 6 ரசிகர்களை மைதானத்திலிருந்து வெளியேற்றினார். அதன்பின் ஆட்டம் தொடங்கியது.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, நேற்றைய மூன்றாம் நாள் ஆடத்தின் போதும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், ஜஸ்பித் பும்ரா இருவரையும் மைதானத்தில் இருந்த சில ரசிகர்கள் இனரீதியாக இழிவுப்படுத்தியதாக இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த அலுவலர்கள் புகார் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'புஜாராவின் நிதானம்; நான் ஸ்டிரைக்கருக்கு அழுத்தம்' - ரிக்கி பாண்டிங்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.