சென்னை: தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி, நுங்கம்பாக்கம் மைதானத்தில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் இன்று (பிப்.19) ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் அமெரிக்க வீரர் நிக்கோலஸ் மொரேனோ டி ஆல்போரன் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ் பர்சல் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 5-7, 7-6, 6-4 என்ற செட் கணக்கில், மேக்ஸ் வெற்றி பெற்றார். இது பர்சலுக்கு மூன்றாவது ஏடிபி சேலஞ்சர் ஒற்றையர் பட்டமாகும்.
சாம்பியன் பட்டம் வென்ற மேக்ஸூக்கு வெற்றிக் கோப்பை மற்றும் இந்திய மதிப்பில் ரூ.14 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த நிகோலஸூக்கு ரூ.6 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ், ஏடிபி உலக தரவரிசை பட்டியலில் 155வது இடத்துக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடர் : இந்தியா - இங்கிலாந்து இணை சாம்பியன்!