ETV Bharat / sports

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி தொடக்கம்!

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் நடத்தும் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி தொடங்கியது.

சென்னை ஓபன்
சென்னை ஓபன்
author img

By

Published : Feb 13, 2023, 11:43 AM IST

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏ.டி.பி சேலஞ்சர் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று (பிப்.13) தொடங்கியது. போட்டிகள் நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்று பிரதான சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன.

4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இப்போட்டியில், 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். உலகத் தரவரிசையில் 108வது இடத்தில் இருக்கும் சீன தைபே வீரர் சுன் சின் செங், முதல் சுற்றில் குரோஷிய வீரர் நினோ செர்டாருசிச்சை சந்திக்கிறார். இங்கிலாந்தின் பெனிஸ்டன் ரையான், ஆஸ்திரியாவின் செபாஸ்டின் அப்னெர், இத்தாலியின் லுகா நார்டி ஆகிய முன்னணி வீரர்களும் களம் காண்கின்றனர். முதல் நாளான இன்று 11 போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்திய தரப்பில் பிரனேஷ் குணேஸ்வரன், ராம்குமார் ஆகியோருக்கு ஒற்றையர் பிரிவில் வைல்டு கார்டு சலுகை வழங்கப்பட்டுள்ளது. எனவே இருவரும் நேரடியாக பிரதான சுற்றில் விளையாடுவார்கள். முன்னாள் நம்பர் ஒன் வீரரான சுவீடனை சேர்ந்த ஜான் போர்க்கின் மகன் லியோ போர்க்குக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.1.06 கோடி. சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு ரூ.14.47 லட்சத்துடன் 100 தரவரிசை புள்ளிகள் கிடைக்கும். 2ம் இடத்தை பிடிக்கும் வீரருக்கு ரூ.8.5 லட்சம் வழங்கப்பட உள்ளது.தினமும் காலை 10 மணிக்கு போட்டி தொடங்கும் நிலையில், ரசிகர்கள் கட்டணமின்றி இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'டென்னிஸ் வீரர்கள் முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்' - டென்னிஸ் ஜாம்பவான் அட்வைஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.