ETV Bharat / sports

1996-இல் நிகழ்த்திய சாதனையை இலங்கை மீண்டும் சாத்தியமாக்குமா? - today latest news

World Cup 2023: இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கவும் அவரது குழுவும் 1996-இல் சாதித்ததை, கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 போட்டியில் மீண்டும் செய்ய இலங்கை அணி காத்திருக்கிறது.

World Cup 2023
கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 - இலங்கை அணி 1996 சாதனையை மீண்டும் செய்யுமா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 10:55 AM IST

சென்னை: கிரிக்கெட்டின் திருவிழாவான ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, இன்று (அக் 05) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த முதல் நாள் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

நவம்பர் 19 அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் உலகக் கோப்பையை வெல்லும் விருப்பமான அணியாக இலங்கை இருக்காது என கூறப்படுகிறது. இருந்த போதிலும், இலங்கையின் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க (Arjuna Ranatunga) மற்றும் அவரது குழுவினர், லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் உலகக் கோப்பையை வென்ற சாதனையைப் பின்பற்ற இலங்கை அணி காத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

அக்டோபர் 7ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில், தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து தனது போட்டியைத் துவங்கும் இலங்கை அணியின் பலம், பலவீனங்கள், வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து இங்கே காணலாம்.

பலம்: இலங்கை அணியில் தசுன் ஷனக (Dasun Shanaka), குசல் மெண்டிஸ் (Kusal Mendis) மற்றும் திமுத் கருணாரத்னே (Dimuth Karunaratne) போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் அணிக்கு மிகச்சிறந்த பலமாக உள்ளனர். மேலும், துணைக்கண்ட அணியாக இருப்பதால், சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறந்து விளங்குகிறார்கள்.

குசல் மெண்டிஸ் ஒருநாள் போட்டிகளில் 112 இன்னிங்ஸ்களுக்கு 32.1 சராசரியில் இரண்டு சதங்கள் மற்றும் 25 அரை சதங்களுடன் 3,215 ரன்கள் எடுத்துள்ளார். திமுத் கருணாரத்னே-வைப் பொறுத்தவரையில், அவர் சிறந்த நுட்பத்துடன் விளையாடக்கூடிய ஒரு திறமையான வீரர். அவர் ஒருநாள் போட்டிகளில் சிறந்த சாதனை படைத்துள்ளார். 44 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 11 அரை சதங்கள் அடித்து 1,301 ரன்கள் எடுத்துள்ளார்.

திறமையான இளைஞர்கள்: புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் வழங்கக்கூடிய பத்தும் நிசங்கா (Pathum Nissanka) மற்றும் சரித் அசலங்கா (Charith Asalanka) போன்ற நம்பிக்கைக்குரிய திறமையான இளம் வீரர்களை இலங்கை அணி கொண்டுள்ளது. பதும் நிசங்கா 41 போட்டிகளில் விளையாடி 37 சராசரியுடன் 3 சதங்கள் மற்றும் 9 அரைசதங்களுடன் 1,396 ரன்கள் எடுத்துள்ளார். ஆசியக் கோப்பை சூப்பர் ஃபோர் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சரித் அசலங்கா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இடது கை பேட்டிங்கும் ஆஃப்-பிரேக் பந்துவீச்சாளருமான இவர், 41 போட்டிகளில் 41.03 சராசரியில் ஒரு சதம் மற்றும் 9 அரைசதங்களுடன் 1,272 ரன்கள் எடுத்துள்ளார்.

பலவீனங்கள்: சமீப காலமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் இலங்கை இணக்கமற்ற தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. நெருக்கடியான சூழ்நிலையில் தொடர்ந்து செயல்படும் திறன் இல்லாததால், மார்க்யூ போட்டி (marquee tournament) இலங்கை அணிக்கு பெரும் சவாலாக இருக்கலாம்.

மூத்த வீரர்களைச் சார்ந்திருத்தல்: இலங்கை அணி பெரிதும் அணியின் மூத்த வீரர்களையே நம்பி உள்ளது. மேலும் அவர்கள் தங்களது பங்களிப்பைக் கொடுக்கத் தவறினால், அது அணியில் உள்ள அனுபவமற்ற வீரர்களுக்கு பெரும் அழுத்தத்தை அளிக்கிறது. இது போன்ற சூழ்நிலை, புதிய வீரர்களுக்கும் பெரும் சவாலாக அமைகிறது.

வரையறுக்கப்பட்ட அனுபவம்: பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் அணிக்கு ஆழமான அனுபவம் இல்லாத காரணத்தால், போட்டியின் இடையே வீரர்கள் காயமடைந்தாலோ அல்லது போட்டியில் விகேட் இழப்பு ஏற்பட்டாலோ பொருத்தமான மாற்று வீரர்களை களமிறக்குவது அணி நிர்வாகத்திற்கு சவாலாக அமைகிறது.

வாய்ப்புகள்: 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி, இலங்கை அணியில் வளர்ந்து வரும் திறமையான வீரர்களான பதும் நிசங்கா மற்றும் சரித் அசலங்கா போன்றவர்களுக்கு உலகளாவிய அரங்கில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த சிறந்த களமாக உள்ளது. மேலும், இவர்கள் இலங்கையின் எதிர்கால நட்சத்திர வீரர்களாக மாறும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

நுட்பமான திட்டமிடல்: எதிர் அணிகளின் பலவீனங்களை தங்களுக்கு பக்கபலமாக மாற்றித் திறம்படத் திட்டமிட்டு, பொருத்தமான வீரர்களை அடையாளம் கண்டு களமிறக்குவது இலங்கை அணிக்கு முக்கியமான ஆட்டங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை பெற்றுத் தரும்.

அச்சுறுத்தல்கள்: வலிமையான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசைகளுடன் இலங்கை கடுமையான எதிர் அணிகளை எதிர்கொள்ளும் சூழல் உள்ளது. நட்சத்திர வீரர்கள் உள்ள அணிகளை எதிர்கொள்வது இலங்கை அணிக்கு குறிப்பிடத்தக்க சவாலாக இருக்கலாம்.

போட்டியில் ஏற்படும் காயங்கள்: போட்டியின்போது மூத்த வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள், அணியின் சமநிலை மற்றும் வியூகத்தை சீர்குலைத்து, உயர் மட்டத்தில் போட்டியிடுவது கடினமாக மாறும் வாய்ப்பும் உள்ளது.

அணியின் மீதான எதிர்பார்ப்புகளின் அழுத்தம்: உலகக் கோப்பை போன்ற உயர்தரப் போட்டியில் விளையாடும்போது ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த அணியின் எதிர்பார்ப்புகளின் அழுத்தம் சில நேரங்களில் களத்தில் வீரர்கள் தங்களது செயல்திறனை இழக்க நேரிடும்.

ஆகவே, உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணியில் உள்ள அனுபவமும், திறமையும் நிறைந்த வீரர்கள் போட்டியில் வெற்றிபெற, அவர்கள் தங்களது பலவீனங்களைச் சரிசெய்து வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், வலுவான எதிர் அணியின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: Asian Games 2023: ஆசிய விளையாட்டில் தொடரும் இந்திய வீரர், வீராங்கனைகளின் பதக்க வேட்டை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.