ETV Bharat / sports

கரோனா அறிகுறிகள்: தனிமைப்படுத்திக்கொண்ட கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார் - உலக டெஸ்ட் சம்பியன் ஷிப்

கரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாரும் அவரது மனைவியும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

bhuvneshwar
bhuvneshwar
author img

By

Published : Jun 1, 2021, 5:38 PM IST

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை.

இவர் தற்போது மீரட்டில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்துவருகிறார். சமீபத்தில்தான் புவனேஷ்வர் குமாரின் தந்தை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் கடந்தவாரம் புவனேஷ்வர் குமாரின் தாயாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து புவனேஷ்வர் குமாரும் அவரது மனைவியும் வீட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனிமைப்படுத்திக்கொண்டனர்.

தற்போது இவர்கள் இருவருக்கும் கரோனா தொற்று அறிகுறிகள் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இவர்கள் இருவரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டபோது அதன் முடிவில் நெகட்டிவ் வந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.