டெல்லி: உலகமே எதிர்பார்த்து காத்து இருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை அடுத்த மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கிறது. இதன் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும். 46 நாட்கள் நடக்கும் இந்தத் தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறுகின்றன.
-
🏏🇮🇳 An iconic moment for cricket and the nation!
— BCCI (@BCCI) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
As part of our "Golden Ticket for India Icons" programme, BCCI Honorary Secretary @JayShah presented the golden ticket to Bharat Ratna Shri @sachin_rt.
A symbol of cricketing excellence and national pride, Sachin Tendulkar's… pic.twitter.com/qDdN3S1t9q
">🏏🇮🇳 An iconic moment for cricket and the nation!
— BCCI (@BCCI) September 8, 2023
As part of our "Golden Ticket for India Icons" programme, BCCI Honorary Secretary @JayShah presented the golden ticket to Bharat Ratna Shri @sachin_rt.
A symbol of cricketing excellence and national pride, Sachin Tendulkar's… pic.twitter.com/qDdN3S1t9q🏏🇮🇳 An iconic moment for cricket and the nation!
— BCCI (@BCCI) September 8, 2023
As part of our "Golden Ticket for India Icons" programme, BCCI Honorary Secretary @JayShah presented the golden ticket to Bharat Ratna Shri @sachin_rt.
A symbol of cricketing excellence and national pride, Sachin Tendulkar's… pic.twitter.com/qDdN3S1t9q
இந்த தொடர் இந்தியாவில் உள்ள 10 மைதானங்களில் நடைபெறுகிறது. முதல் போட்டியாக இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்தியா அணி, தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை சென்னையில் சந்திக்கிறது. மேலும், இத்தொடருக்கான டிக்கெட்டுகள் விற்பனை கடந்த மாதம் இறுதியில் தொடங்கபட்டு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்போட்டிகளை இந்தியாவில் தலைசிறந்து விளங்கும் நபர்கள் காணும் வகையில் கோல்டன் டிக்கெட்டை வழங்கும் நடைமுறையை கடந்த சில நாட்களாக பிசிசிஐ கடைபிடித்து வருகிறது. அந்த வகையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலாளர் ஜெய் ஷா கோல்டன் டிக்கெட்டை வழங்கி உள்ளார்.
இதையும் படிங்க: 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் ஆஸ்திரேலிய வீரர்!
இது குறித்து பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “எங்களின் ‘கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ்’ (Golden Ticket for Indian Icons) திட்டத்தின் ஒரு பகுதியாக பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட்டை பரிசாக வழங்கியுள்ளார். மேலும், கிரிக்கெட்டின் சிறப்பு மற்றும் தேசியப் பெருமையின் சின்னமான சச்சின் டெண்டுல்கர் தற்போது ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பையை நேரில் கண்டுகழிப்பார்” என கூறி உள்ளது.
முன்னதாக உலகக் கோப்பை போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சனுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Asia Cup 2023: இந்தியா - பாகிஸ்தான் சூப்பர் 4 ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு... ரிசர்வ் டே இருக்கா?