புனே : 2023ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை எந்த அணியும் தோற்கடிக்கப்படாத வகையில் இந்திய அணியை வங்காளதேச அணி தோற்கடிக்கும் என வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் முஜிபிகுர் ரஹீமின் தந்தை ஈ.டிவி பரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்து உள்ளார்.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெறும் 17வது லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் வங்கதேசம் அணி 5 விக்கெட்டுகளுக்கு மேல் இழந்து ஊசலாடி வருகிறது. இந்நிலையில் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் முஜிபிகுர் ரஹீமின் தந்தை மஹ்பூப் ஹபிப் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவுக்கு எதிரான வெற்றியை வங்கதேசம் அணி பெற வேண்டும் என விரும்புவதாக கூறினார். அதேநேரம் இந்தியா போன்ற வலிமையான எதிரியை தோற்கடிப்பது என்பது கடினமான சவால் என்றும் அவர் கூறினார். வங்கதேசம் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெறுவது என்பது எளிதான காரியம் அல்ல என்று கூறினார்.
இந்தியா தோற்கடிப்பதற்கு கடினமான அணி என்றும் நடப்பு தொடருக்கான சாம்பியன் போட்டியாளர்களில் இந்தியாவும் ஒன்று என்றும் அவர் கூறினார். எந்த அணி இன்றைய ஆட்டத்தில் சிறப்பு செயல்படுகிறதோ இறுதியில் வெற்றி பெறும் என்றார். இந்திய அணியில், விராட் கோலி சிறப்பாக விளையாடி வருவதாகவும், தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா சுப்மான் கில், பேட்டிங் அற்புதமான அளவில் உள்ளதாகவும் கூறினார்.
இந்தியா வலிமையான அணியாக உள்ளதாகவும் அதேநேரம் வங்களாதேசம் அணி பலவீனமாக இல்லை என்றும் இந்தியாவுக்கு கடுமையான போட்டியை வங்காளதேச வீரர்கள் வழங்குவார்கள் எண்றும்" மஹ்பூப் ஹபிப் தெரிவித்தார்.
ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்கு பிறகு புனே மைதானத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்தியா - வங்காளதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு உள்ளனர்.
இதையும் படிங்க : Hardik Pandya : ஹர்திக் பாண்ட்யா திடீர் காயம்!