ஐதராபாத் : இடது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக அனமுல் ஹாக் அணியில் இணைக்கப்பட்டு உள்ளார்.
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
லீக் சுற்று ஆட்டங்களில் உச்சக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் போராடி வருகின்றன. இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி அதில் இரண்டில் மற்றும் வஙக்தேசம் அணி வெற்றி பெற்று உள்ளது.
ஏறத்தாழ, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட வங்கதேசம் அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் நவம்பர் 11ஆம் தேதி முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இடது கை ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காயம் காரணமாக ஷகிப் அல் ஹசன் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
-
🚨 BREAKING: Bangladesh name Shakib Al Hasan's replacement as well as the captain for the final #CWC23 game against Australia.
— ICC (@ICC) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Details 👇https://t.co/JDH1WoH8Lk
">🚨 BREAKING: Bangladesh name Shakib Al Hasan's replacement as well as the captain for the final #CWC23 game against Australia.
— ICC (@ICC) November 7, 2023
Details 👇https://t.co/JDH1WoH8Lk🚨 BREAKING: Bangladesh name Shakib Al Hasan's replacement as well as the captain for the final #CWC23 game against Australia.
— ICC (@ICC) November 7, 2023
Details 👇https://t.co/JDH1WoH8Lk
இலங்கை அணிக்கு எதிராக நேற்று (நவ. 6) நடந்த லீக் ஆட்டத்தின் போது ஷகிப் அல் ஹசனுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆட்டம் முடிந்த பிறகு அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது இடது கை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டதாகவும் ஆட்டத்தின் போதும் வலி நிவாரணிகள் எடுத்துக் கொண்டு ஷகிப் அல் ஹசன் விளையாடியதாகவும் வங்கதேசம் அணியின் பிசியோதெரபிஸ்ட் தெரிவித்து உள்ளார்.
ஷகிப் அல் ஹசன் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக அனமுல் ஹாக் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். வரும் நவம்பர் 11ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில், துணை கேப்டன் நஜ்முல் ஹூசை ஷாண்டோ அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : உலக கோப்பை கிரிக்கெட்டில் இருந்து ஷகிப் அல் ஹசன் விலகல்! என்ன காரணம்?