ETV Bharat / sports

ஒரு ஆட்டத்தில் ஓராயிரம் சாதனைகள்! - அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வெலின் சாதனை பட்டியல்! - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்சாதனை

Glenn Maxwell Records : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆஸ்திரேலிய வீரர் முதல் பல்வேறு சாதனைகளை ஒரே இரவில் படைத்தும், தகர்த்தும் உள்ளார் அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வெல்.

Glenn Maxwell
Glenn Maxwell
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 12:57 PM IST

Updated : Nov 8, 2023, 2:34 PM IST

மும்பை : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கனிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.

லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க அணிகள் போராடி வருகின்றன. இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டும் அரைஇறுதிக்கு தகுதி பெற்று இருந்த நிலையில் நேற்று (நவ. 7) மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது அணியாக ஆஸ்திரேலியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆடத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்கம் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக நடையை கட்டிய நிலையில், கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் 201 ரன்கள் குவித்து ஒன் மேன் ஆர்மியாக அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். மேலும் அவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் இரட்டை சதம் அடித்தது மட்டுமின்றி பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆகி உள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரர் அல்லாமல் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை கிளென் மேக்ஸ்வெல் படைத்து உள்ளார். 91 ரன்களுக்கு 7 விக்கெட் இழப்பு என்ற கணக்கில் பேட் கம்மின்ஸ் உடன் கைகோர்த்த மேக்ஸ்வெல், தனி நபராக அடித்து விளையாடி அணிக்கு வெற்றியை தேடித் தந்து உள்ளார்.

மேக்ஸ்வெல் - கம்மின்ஸ் ஜோடி 202 ரன்களை பார்ட்னர்ஷிப்பாக அடித்தது. இதில் கம்மின்சின் எடுத்தது 12 ரன்கள் மட்டுமே. மீதமுள்ள 190 ரன்களை ஒற்றை ஆளாக மேக்ஸ்வெல் எடுத்து அதிரடி காட்டி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 11 இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டு உள்ள அதில் மேக்ஸ்வெல் மட்டும் தொடக்க வீரர் அல்லாமல் இரட்டை சதம் அடித்தவர். மற்ற இரட்டை சதங்கள் அனைத்தும் ஓபனிங் பேட்ஸ்மேன்களால் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரர் அல்லாமல் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் கிளென் மேக்ஸ்வெல் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றை (நவ. 7) ஆட்டத்தில் 6வது வரிசையில் களமிறங்கிய மேக்ஸ்வெல், இரட்டை சதம் விளாசினார். ஆறாவது வரிசையில் களமிறங்கி இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையும் மேக்ஸ்வெல் வசமே சென்று உள்ளது.

அதேபோல் இரட்டை சதம் அடித்த ஒரே ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பையும் மேக்ஸ்வெல் பெற்று உள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய ஷேன் வாட்சன், வங்கதேசம் அணிக்கு எதிராக 185 ரன்கள் அடித்ததே, ஆஸ்திரேலிய வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது அதை மேக்ஸ்வெல் முறியடித்து உள்ளார்.

அதேநேரம், மகளிர் கிரிக்கெட்டில் பெலிண்டா கிளார்க், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற சாதனை படைத்து உள்ளார். நேற்றைய ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய மேக்ஸ்வெல் 201 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் 2021ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் பக்கர் ஷமான் 193 ரன்கள் அடித்ததே ஒருநாள் கிரிக்கெட்டில் இதற்கு முன் அடிக்கப்பட்ட இரண்டாவது இன்னிங்ஸ் அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மேக்ஸ்வெல் அடித்த இரட்டை சதம் உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட மூன்றாவது இரட்டை சதம் ஆகும். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து வீரர் மார்டின் கப்திலும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலும் உலக கோப்பை கிரிக்கெட்டில் இரட்டைச சதம் அடித்தனர்.

இதில் கூடுதல் சுவாரஸ்யதக்க தகவல் என்னவென்றால் இந்த இரண்டு இரட்டை சதங்களும் கடந்த 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அடிக்கப்பட்டது. நேற்றைய ஆட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ரன்கள் அடித்தார். இது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இரட்டை சதம் மட்டுமா மேக்ஸ்வெல் சாதனை? - மனம் திறந்த வீரரின் உலகக் கோப்பை சாதனை பட்டியல்!

Last Updated : Nov 8, 2023, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.