இந்தியாவை பின்னுக்குத்தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறிய ஆஸ்திரேலிய அணி! - pakistan vs australia
ICC Test Ranking: இந்திய அணியை ஒரு புள்ளி வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலிய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளது.


Published : Jan 5, 2024, 7:35 PM IST
துபாய்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இருப்பினும், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டு வருவதால், பேட் கம்மின்ஸ் தலைமையிலான அந்த அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
-
A new No.1 side is crowned in the @MRFWorldwide ICC Men's Test Team Rankings 👑
— ICC (@ICC) January 5, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
More ⬇️
">A new No.1 side is crowned in the @MRFWorldwide ICC Men's Test Team Rankings 👑
— ICC (@ICC) January 5, 2024
More ⬇️A new No.1 side is crowned in the @MRFWorldwide ICC Men's Test Team Rankings 👑
— ICC (@ICC) January 5, 2024
More ⬇️
ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகின்றது. இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரண்டிலுமே ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 3வது போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று (ஜன.05) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணி 118 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்திய அணி 117 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இது தொடர்பாக ஐசிசி தரப்பில் கூறியிருப்பதாவது, “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தாலும், ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தி இரண்டு போட்டிகள் வென்றிப்பதால், ஆஸ்திரேலிய அணி முதல் இடம் பிடித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு பிறகு தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி தற்போது மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளது. அதேபோல் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மற்றும் நடைபெறவுள்ள இந்தியா - இங்கிலாந்து அணி இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவை டெஸ்ட் தரவரிசை புள்ளிகளுக்கு மேலும் வழிவகுக்கும்" என குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: டி20 போட்டியில் ரோகித், கோலி? - அணியில் நிகழப்போகும் மாற்றம் என்ன?