ETV Bharat / sports

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆரோன் பின்ச் ஓய்வு - நான் மிகவும் அதிர்ஷ்டசாலி

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா கேப்டன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஒய்வு!!

author img

By

Published : Sep 10, 2022, 9:25 AM IST

சிட்னி: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அந்த வகையில் நாளை (செப். 11) நடைபெற உள்ள நியூசிலாந்துடனான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளார். ஆரோன் பிஞ்ச் இதுவரை 145 ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள், 30 அரை சதங்கள் உள்பட 5,401 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த ஒய்வு குறித்து ஆரோன் பிஞ்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சில நம்பமுடியாத நினைவுகளுடன், ஒரு நாள் போட்டிகள் அற்புதமான நாட்களை தந்தது. திறமைமிக்க ஒரு நாள் போட்டி அணிகளில் நான் ஒரு பகுதியாக இருந்ததற்கு அதிர்ஷ்டசாலி போல உணர்கிறேன். எனது பயணத்திற்கு உதவிய மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: டைமண்ட் லீக் கோப்பையை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.