ஹைதராபாத்: ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக நேற்று தொடங்கியது ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை.கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தொடரின் முதல் போட்டியில் நேபாள அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இலங்கை அணி இன்று வங்காள தேச அணியை எதிர்கொண்டது. இலங்கை பல்லகெலே கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 3 மணி அளவில் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பங்களதேஷ் அனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
வங்காள தேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் டன்ஜின் ஹசன் இலங்கை அணியின் தீக்ஷனா பந்து வீச்சில் தனது விக்கெட்டை ரன் ஏதும் எடுக்காத நிலையில் இழந்து வெளியேறினார். 10 ஓவர்கள் முடிவில் வங்காள தேச அணி 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் சேர்த்த சேர்த்தது.
15 ஓவர்கள் முடிவில் வங்காள தேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் தடுமாறிய நிலையில் 25.4 ஓவர்களில் வங்காள தேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர், சீராக விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்துவர, நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ நிதானத்துடனும் ஆடி அரை சதம் அடித்தார். நிதாரண ஆட்டத்தை வெளிகொண்டு வந்த அவர் இறுதியில் 122 பந்தில் 7 பவுண்டரியுடன் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய வங்காள தேசத்தின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இதனால் 42.4 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இந்த போட்டியில் வங்காள தேசத்தின் 11 வீரர்கள் பேட்டிங் செய்தும் ஒருவர் கூட ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இலங்கை அணி சார்பில் பத்திரனா 4 விக்கெட்டுகளையும், தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதன் மூலம் இலங்கை அணியின் வெற்றிக்கு 165 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.
இலங்கையின் பந்துவீச்சை சாமளிக்க முடியாமல் வங்காள தேச அணி தினறியது. இலங்கை அணியில் ஹசரங்கா, சமீரா, லாஹிரு குமாரா போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் காயத்தால் விலகியது இலங்கை அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில் அபாரமாக பந்து வீசினார்.
பின்னர், 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழ்ந்து வெளியேறினர். 3 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி வெறும் 43 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பின்னர், சமரவிக்ரமா மற்றும் அசலங்கா கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அடுத்தடுத்து இருவரும் அரைசதம் அடித்து வெற்றியை நோக்கி இலங்கை அணியை அழைத்துச் சென்றனர்.
இறுதியில் இலங்கை அணி 39 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 165 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி 11 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இலங்கை - வங்காள தேசம் அணிகள் ஆசிய கோப்பை தொடரில் 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13 முறை இலங்கை அணியும், 3 முறை வங்கதேசமும் வெற்றி பெற்றுள்ளன.
இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மோதியதில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் 50 ஓவர் போட்டிக்கான கடைசி மோதலில் வங்காள தேசம் வெற்றி பெற்றுள்ளது. இதன் தொட்ர்ச்சியாக இன்று நடந்த பேட்டியில் வங்காள தேச அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றிபெற்றது.
இதையும் படிங்க : Ashwin Ravichandran: ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் டீம் டஃப் கொடுக்கும்: ரவிச்சந்திரன் அஸ்வின் ஓபன் டாக்!