லாகூர்: 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் ஒருநாள் போட்டி கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4வது லீக் ஆட்டமானது இன்று (செப்.3) லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
-
Bangladesh choose to bat against Afghanistan 🏏
— ICC (@ICC) September 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Who are you rooting for?#AsiaCup2023 pic.twitter.com/LxJNffesVJ
">Bangladesh choose to bat against Afghanistan 🏏
— ICC (@ICC) September 3, 2023
Who are you rooting for?#AsiaCup2023 pic.twitter.com/LxJNffesVJBangladesh choose to bat against Afghanistan 🏏
— ICC (@ICC) September 3, 2023
Who are you rooting for?#AsiaCup2023 pic.twitter.com/LxJNffesVJ
முதலில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக முகமது நயிம் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் களம் இறங்கினர். நல்ல தொடக்கத்துடன் விளையாடி வந்த முகமது நயிம் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சுழல் பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மான் பந்து வீச்சில் போல்ட் ஆனார். அதன் பின் வந்த டவ்ஹித் ஹ்ரிடோய் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து களம் கண்ட நஜ்முல் ஹொசைன் சாண்டோ - மெஹிதி ஹசன் மிராஸுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மெஹிதி ஹசன் மிராஸ் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். இவர்களது பார்ட்னர்ஷிப், அணிக்கு நல்ல ஸ்கோரை பெற்றுத் தந்தது. வங்கதேசம் அணி 257 ரன்கள் எடுத்த நிலையில், மெஹிதி ஹசன் மிராஸ் தனது இடது கையில் உள்ள பிரச்னை காரணமாக ( retd hurt) வெளியேறினார்.
பின்னர் தொடர்ந்து சாண்டோ சதம் விளாசினார். இது அவரது 2வது சதம் ஆகும். இறுதியில் வங்கதேசம் அணி, 50 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 334 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் குல்பாடின் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. தொக்கத்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து ரஹ்மத் ஷா 33 ரன்களிலும், நஜிபுல்லா சத்ரன் 17 ரன்களிலும் வெளியேறினர். சிறப்பாக ஆடி வந்த இப்ராஹிம் சத்ரான் மற்றும் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி அரைசதம் அடித்தனர். இருப்பினும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க, இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஒவர்களில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வங்கதேச பந்துவீச்சு தரப்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட்களும், ஷோரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளும் எடுத்து மிரட்டினார். ஹசன் மஹ்மூத், மெஹிதி ஹசன் மிராஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் வங்கதேசம் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: IND VS PAK: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து... இந்தியாவின் நிலை என்ன?