சென்னை: நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை தொடர்ந்து, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியையும் வென்று அப்செட் செய்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பெற்று இருப்பதுடன், உலக கோப்பை கிரிக்கெட்டில் அந்த அணியை முதல் முறையாக வீழ்த்தி புது மைல்கல் படைத்துள்ளது ஆப்கானிஸ்தான்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் 22வது லீக் போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது ஆப்கானிஸ்தான். டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 282 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 74 ரன்களும், ஷபீக் 58 ரன், ஷதாப் கான் மற்றும் இப்திகார் அகமது தலா 40 ரன்களும் எடுத்தனர். அதன்பின் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தங்களது நிதான ஆட்டத்தின் மூலம் வெற்றி கண்டது. தொடக்க வீரர்களான குர்பாஸ் 65, இப்ராஹிம் சத்ரான் 87 ரன்களும் எடுத்து அசத்தினர்.
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தன் அணி முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வென்றது மட்டுமன்றி முன்னாள் உலக கோப்பை சாம்பியனை தோற்கடித்த பெருமையையும் பெற்றது. ஆம், 1992ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பையை இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி வென்று இருந்தது. இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்றியது.
பாகிஸ்தான் அணி நடப்பாண்டு உலக கோப்பையில் மூன்று தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் அவர்கள் வர இருக்கும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
ஒருநாள் உலகக் கோப்பையில் அதிர்ச்சிகர வெற்றியை தந்த ஆட்டங்கள் :
1983 - ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வென்றது
1992 - ஜிம்பாப்வே இங்கிலாந்தை வென்றது
1996 - கென்யா வெஸ்ட் இண்டீசை வென்றது
1999 - ஜிம்பாப்வே இந்தியாவை வென்றது
1999 - ஜிம்பாப்வே தென் ஆப்பிரிக்காவை வென்றது
1999 - பங்களாதேஷ் பாகிஸ்தானை வென்றது
2003 - கென்யா இலங்கையை வென்றது
2007 - பங்களாதேஷ் இந்தியாவை வென்றது
2007 - அயர்லாந்து பாகிஸ்தானை வென்றது
2007 - பங்களாதேஷ் தென் ஆப்பிரிக்காவை வென்றது
2011 - அயர்லாந்து இங்கிலாந்தை வென்றது
2011 - பங்களாதேஷ் இங்கிலாந்தை வென்றது
2015 - அயர்லாந்து வெஸ்ட் இண்டீசை வென்றது
2015 - பங்களாதேஷ் இங்கிலாந்தை வென்றது
2019 - பங்களாதேஷ் தென் ஆப்பிரிக்காவை வென்றது
2019 - பங்களாதேஷ் வெஸ்ட் இண்டீசை வென்றது
2023 - ஆப்கானிஸ்தான் இங்கிலாந்தை வென்றது
2023 - நெதர்லாந்து தென் ஆப்பிரிக்காவை வென்றது
2023 - ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை வென்றது
ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் அப்செட்களின் எண்ணிக்கை:
3 *- 2023
3 - 1999
3 - 2007
2 - 2011
2 - 2015
2 - 2019
1 - 1983
1 - 1992
1 - 1996
1 - 2003
இதையும் படிங்க: ஆம்னி பஸ் ஸ்டிரைக் வாபஸ்.. மாலை 6 மணிக்கு பேருந்துகள் இயங்கும்!