இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஷிகர் தவான் கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ஆயிஷா முகர்ஜி முதல் கணவரை பிரிந்தவர். இந்நிலையில், அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ஷிகர் தவானை மணந்துகொண்டார். பின்னர், இந்த இணைக்கு 2014ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு
இந்நிலையில், திருமணமாகி எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஷிகர் தவானுக்கும் தனக்குமான திருமண உறவு விவாகரத்தில் முடிந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"விவாகரத்து என்ற வார்த்தை மிகவும் அசிங்கமானது என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், இரண்டு முறை விவாகரத்தான பின்னர்தான் அப்படி நினைத்தது தவறு என்பது புரிகிறது" எனக் கூறியுள்ளார்.
தேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை
ஷிகர் தவான் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆயிஷா முகர்ஜி, தனது எட்டு வயதில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் தேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா திரில் வெற்றி - டெஸ்ட் தொடரில் முன்னிலை